26/11 போல போன்று மீண்டும் தாக்குதல்.. மும்பை போலீசுக்கு பாக். தீவிரவாதிகள் வாட்ஸ்-அப்பில் மிரட்டல்
மும்பை: மும்பை அருகே ஏ.கே.-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய நிலையில், தற்போது மும்பையில் 26/11 போன்ற தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக தீவிரவாதிகள் வாட்ஸ்-அப் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். ஈவு இரக்கமற்ற இந்த கொடூர தாக்குதலில் 166- பேர் கொல்லப்பட்டனர். 300- க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியாவை உலுக்கிய இந்த தாக்குதலில் அஜ்மல் ஹசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். மேலும் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2012- ஆம் ஆண்டு அஜ்மல் கசாப்பும் தூக்கில் போடப்பட்டான். இந்த தாக்குதல் நடைபெற்று 14 ஆண்டுகள் ஆனாலும் அதன் பாதிப்புகள் இன்று வரை மறையாமல்தான் உள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலுக்குப்பிறகு மும்பையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பிரதான இடங்களில் தீவிர பாதுகாப்பில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள்
இந்த நிலையில், மும்பை அருகே கடல் பகுதியில் ஒரு படகு ஒன்று தனியாக நின்றுகொண்டிருந்தது. அந்த படகில் யாரும் இல்லாத நிலையில், அந்த படகில் மூன்று ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், சில தோட்டாக்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆல் இல்லாத படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்றும், மீண்டும் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் பீதி உண்டானது.

வாட்ஸ்-அப் மெசேஜ்
இதையடுத்து மாநில உள்துறை அமைச்சரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து என்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மும்பையின் ஓர்லி போக்குவரத்து போலீசாரின் காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண்ணிற்கு பாகிஸ்தான் தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜ்ஜில் மும்பையில் 26/11 தாக்குதலை போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறோம்
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகரிகளுக்கு தகவல் அளித்தனர். மும்பையில் குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் மெசேஜ் வந்தது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சலர் கூறும் போது, "பயங்கராவாத தடுப்பு பிரிவு மற்றும் மும்பை நகர போலீசார் அலார்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படையினருடன் இணைந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications