யார் இந்த சிந்துதாய்?.. சுரந்த தாய்மை, கசிந்த ஈரம்.. பிச்சையெடுத்தே ஆதரவற்றோரின் பசியாற்றிய மனிதம்
ஆதரவற்ற குழந்தைகளின் தாய் சிந்துதாய் நம்மை விட்டு பிரிந்தார்
மும்பை: ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சிந்துதாய் சப்கல்.. 74 வயதாகிறது.. இவரது இழப்பு மகாராஷ்டிர மக்களை கலங்க வைத்து வருகிறது...
யார் இந்த சிந்துதாய் சப்கல்?
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்மணி இவர்.. பிறந்ததில் இருந்து வறுமையை நேரடியாகவே அனுபவித்தவர்.. 4-வறுமையை தவிர வேறொன்றும் அறியாதவர்.
வறுமை காரணமா படிப்பும் அவ்வளவாக இல்லை.. 4-ம் வகுப்புதான் படித்தார்.. மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடினால், பசியால் சுருண்டு படுத்து கொள்வாராம் சிந்துதாய்..

மாப்பிள்ளை
இந்த அவலம் குழந்தை பருவத்தில் மட்டுமல்ல, இவரது இளமை காலம் வரை விரட்டி கொண்டே வந்தது.. ஆனால், இவருக்கு 12 வயதாக இருக்கும்போதே வீட்டில் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.. காரணம் அதே வறுமைதான். மாப்பிள்ளைக்கு 32 வயது.. வேறு வழியில்லாமல் அந்த திருமணத்தை ஏற்றார்.. சிந்துதாய்க்கு 3 குழந்தைகள் பிறந்தன.. இதில், 3வது குழந்தை பிறப்பதற்கு முன்பேயே, கணவர் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்..

கண்ணீர்
பெற்றோரும் உதவ முன்வரவில்லை.. ஆனாலும் 3 பிள்ளைகளை வாழ வைக்க படாதபாடு பட்டார்.. ஒருகட்டத்தில் அந்த பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்காக, பிச்சை எடுத்தார்.. ஒவ்வொருநாளும் பிச்சை எடுத்து வந்து பிள்ளைகளுக்கு சோறு ஊட்டி தூங்க வைக்கும்போதெல்லாம் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.. இந்த கண்ணீர்தான் சிந்துதாயை வலுப்படுத்தியது.. வீட்டை சுற்றிலும் வெறும் வறுமை நிரம்பி கிடந்தது, பிச்சை எடுத்தது, தனித்து விடப்பட்ட கொடுமை, நிராகரிப்புகள், இதெல்லாம் அவரது ஆழ்மனதிலும் பதிந்து போயிற்று..

காப்பகம்
தன்னை போலவே வறுமையில் இனி யாரும் வாடக்கூடாது என்று முடிவெடுத்தார்.. இதற்காகவே, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக வாழ முடிவெடுத்தார்.. அவர்களை வறுமை அண்டாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்தார்.. ஒரு குழந்தைகள் காப்பகத்தையும் ஆரம்பித்தார்... அதற்கு வரவேற்பு ஓரளவு வர தொடங்கியதும், மெல்ல மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார் சிந்துதாய்.. யாருமில்லாத அந்த குழந்தைகளை பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் கவனித்தார்..

கவுரவம்
இறுதியில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தாயாகினார் இந்த சிந்துதாய்.. இதுவரை 1050 ஆதரவற்ற குழந்தைகளை இவர் வளர்த்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இவர்களின் மூலம் 207 மருமகன்கள், 36 மருமகள்கள் சிந்துதாய்க்கு கிடைத்துள்ளனர்.. கடந்த வருடம்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது தந்து மத்திய அரசு கவுரவித்தது.. இதைதவிர கிட்டத்தட்ட 750க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி விட்டார்.. பல்வேறு நிறுவனங்கள் அமைப்புகள் இவரது சேவையை கவுரப்படுத்தி விருதுகளை தந்து சிறப்பித்துள்ளது..

காப்பக குழந்தைகள்
ஆனால், விருதோ, பரிசோ, எதுவானாலும், அதில் வரும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களை கட்டுவதற்கு நிதியாக தந்துவிடுவார்.. இன்று புனேவின் மஞ்சிரி பகுதியில் இவரது அயராத உழைப்பால், ஆதரவற்றோர் காப்பகம் ஒன்று பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது.. அங்கு எண்ணற்ற காப்பக பிள்ளைகள், சிந்துதாயை காணாமல் இன்று தவித்துபோயுள்ளனர்.. வருங்காலம் முழுவதும் மகாராஷ்டிர மாநிலம், சிந்துதாயின் வரலாற்றை மீண்டும் மீண்டும் எழுதி கொண்டே இருக்கும்..!












Click it and Unblock the Notifications