மனைவிக்கு மட்டுமல்ல.. அவர் வளர்க்கும் 3 நாய்களுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்! நீதிமன்றம் அதிரடி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவன், தனக்கும், தான் வளர்க்கும் 3 ராட்வீலர் நாய்களுக்கும் சேர்த்து ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவி மட்டுமல்லாது நாய்களுக்கும் சேர்த்து பராமரிப்பு நிதியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாந்த்ராவில் உள்ள ஒரு பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதாவது இவருக்கு கடந்த 1986ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். தற்போது இந்த பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் தனியாக இருந்த கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்திருக்கிறது. இந்த சண்டை கடந்த 2021ம் ஆண்டு உச்சத்தை எட்டவே, கணவன் தனது மனைவியை விட்டு விட்டு சென்றுவிட்டார்.

ஆனால் பராமரிப்புக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டார். இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக எந்த பணத்தையும் அவர் கொடுக்கவில்லை. எனவே மாதம் ரூ.70,000 பராமரிப்பு தொகை பெற்று தர வேண்டும் என மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி கோமல்சிங் ராஜ்புத் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதாவது கணவர் மனைவியின் பராமரிப்பு செலவுக்காகவும், மனைவி வளர்க்கும் நாய்க்காகவும் மாதந்தோறும் ரூ.50,000 கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. முன்னதாக இதற்கான காரணத்தை விளக்கிய நீதிபதி, "மனைவிக்கு உடல் நலப் பிரச்னைகள் இருக்கின்றன. அவருக்கு என எந்த வருமானமும் கிடையாது. மட்டுமல்லாது இவர்கள் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் மனைவி மீது கணவர் குடும்ப வன்முறையை நிகழ்த்தியிருக்கிறார். தற்போது கணவருக்கு வருமானமும் இருக்கிறது எனவே இடைக்கால பராமரிப்பு நிதியை வழங்க வேண்டும்.
கணவர் தரப்பில் பிசினஸ் லாஸ் என்று சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை இந்நீதிமன்றம் நம்பிக்கையற்றதாக பார்க்கிறது. அதேபோல மனைவி பராமரிக்கும் நாய்களுக்கு நிவாரண தொகை வழங்க மாட்டேன் என்று கணவர் கூறியுள்ளார். இது ஏற்க தக்கது அல்ல. ஏனெனில் தற்போது மனைவி தனியாக இருக்கிறார். பிரிவும் தனிமையும் மிகவும் வலிமிக்கதாகும். இதிலிருந்து மீள செல்லப்பிராணிகள் மிகவும் உதவி செய்கின்றன.
மட்டுமல்லாது செல்லப்பிராணிகள் மரியாதைக்குரிய வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே மனைவிக்கும் அவர் பராமரிக்கும் 3 ராட்வீலர் நாய்களுக்கும் சேர்த்து மாதம் ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். இந்த தீரப்பு சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications