மும்பையில் 5 டோல்கேட்களில் இனி கட்டணமே கிடையாது.. வாகன ஓட்டிகளுக்கு மெகா ஆஃபர் கொடுத்த மகாராஷ்டிரா
மும்பை: மும்பையின் நுழைவு பகுதிகளில் உள்ள 5 சுங்க சாவடிகளில் இலகு ரக வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல கவர்ச்சிகர திட்டங்களை தற்போதே மகாராஷ்டிரா அரசு அறிவித்து வருகிறது.

அந்த வகையில் தற்போது, மும்பை நகருக்குள் உள் நுழையும் சாலைகளில் அமைந்து இருக்கும் அனைத்து இலகு ரக வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற கேபினட் கூடத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுங்க கட்டணம் விலக்கு அளிக்கபடும் 5 சுங்கச்சாவடிகளிலும் மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தால் (MSRDC) நிர்வகிக்கப்படுகிறது.
இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை உள்ள நிலையில், மகாராஷ்டிரா அரசு மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடிகள் மும்பையின் முல்லுண்டு, தஷியார் மற்றும் மன்குர்த் ஆகிய இடங்களில் உள்ளன. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.
எனவே அதற்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்பதால் எப்போது வெண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனா ( ஷிண்டே), பாஜக, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி ஆட்சி நடைபெற்றது. வரும் தேர்தலிலும் இந்தக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.
மறுபக்கம் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா , சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணியும், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் வியூகம் வகுத்து வருகின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications