பைக் டாக்சி புக் செய்த போக்குவரத்து துறை அமைச்சர்! 10 நிமிடத்தில் வந்த பைக்! அடுத்து நடந்தது தான் ஷாக்
மும்பை: நமது நாட்டில் பைக் டாக்சி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணம், டிராபிக்கை தாண்டிச் செல்லலாம் என பல காரணங்கள் இருப்பதால் பைக் டாக்சியில் செல்லவே பலரும் விரும்புகிறார்கள். இதற்கிடையே மகாராஷ்டிராவில் அம்மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர் வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது நமது நாட்டில் இளைஞர்கள் பலரும் பைக் டாக்சியில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள். ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றால் பைக் டாக்சி தான் சிறந்த ஆப்ஷனாக இருக்கிறது. ஆட்டோ, டாக்சி எல்லாம் அதிகக் கட்டணம்.. மேலும், டிராபிக்கை கடந்து செல்லவும் லேட் ஆகும். ஆனால், பைக் டாக்சி அப்படி இல்லை.

பைக் டாக்சி
டிராபிக் இருந்தாலும் கூட புகுந்து புகுந்து வந்துவிடலாம் என்பதால் இளைஞர்கள் பைக் டாக்சியையே விரும்புகிறார்கள். லக்கேஜ் இல்லை என்றால் பைக் டாக்சியே இப்போது பலரும் முதல் சாய்ஸாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் பைக் டாக்சிக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை. அதேநேரம் வெளிப்படையாகத் தடையும் இல்லை. இதனால் மாநிலத்திற்கு மாநிலம் விதிகள் மாறுபடுகிறது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பைக் டாக்சிக்கு இதுவரை அனுமதி இல்லை. இருப்பினும், அங்குச் சட்டவிரோதமாக பைக் டாக்சி இயங்கியே வருவதாகச் சொல்லப்பட்டது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சார்நாயக்கிடம் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டுள்ளார். இருப்பினும், மும்பையில் சட்டவிரோதமாக பைக் டாக்ஸி எதுவும் இல்லை என்றே அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.
புக் செய்த அமைச்சர்
ஆனாலும், அமைச்சர் பிரதாப் அதை நம்பவில்லை. மந்த்ராலயா பகுதியில் இருந்த பிரதாப் தாதர் வரை செல்ல வேறு பெயரில் பைக் டாக்சியை புக் செய்திருக்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில், பைக் அவரைப் பிக்கப் செய்ய வந்து சேர்ந்தது. பிக்கப் செய்ய வந்த டிரைவரிடம் மும்பையில் பைக் டாக்ஸிகள் சட்டவிரோதமானவை என்று கூறிய அமைச்சர் பிரதாப், இருந்தாலும் அவர் சிரமப்படக்கூடாது ரூ.500ஐ கொடுக்க முன்வந்துள்ளார்.
மேலும், அவர், "நான் தான் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர். இந்த விதிகள் எல்லாம் நமகு நன்மைக்காகத்தான்" என்று கூறிய அமைச்சர் பணத்தைக் கொடுத்துள்ளார். பைக் டிரைவர் முதலில் ஒரு நொடி குழம்பிப் போய்விட்டார். பின்னர் சுதாகரித்த அவர் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். அதேநேரம் அந்த பைக் ஓட்டுநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நடவடிக்கை எடுப்போம்
அமைச்சர் பிரதாப் மேலும் கூறுகையில், "உங்களைப் போன்ற ஏழை டிரைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதால் எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குப் பின்னால் இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.
மகாராஷ்டிராவில் ஆப் மூலம் இயங்கும் எந்த பைக் டாக்சி நிறுவனத்திற்கும் மாநில அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. சமீபத்தில் மகாராஷ்டிர அரசு வெளியிட்ட இ-பைக் கொள்கையின்படி, 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு இணங்கும் நிறுவனங்கள் மட்டுமே சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவை விதிகளாக அமலுக்கு வரவில்லை. இதனால் இப்போது வரை பைக் டாக்சிகள் மகாராஷ்டிராவில் சேவைகள் சட்டவிரோதமாகவே உள்ளன.
மக்கள் கோரிக்கை
சமீபத்தில் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பைக் டாக்சி சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டன. இதனால் பெங்களூரில் ஒரே வாரத்தில் டிராபிக் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி தான் சரியான ஆப்ஷன் எனப் பலரும் சொல்கிறார்கள். மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுக் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications