பெரிய திருப்பம்! தாக்கரேவுக்கு ஆதரவாகக் களமிறங்கிய திரிணாமுல் காங்கிரஸ்.. ஒரே டார்கெட் பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் தொடரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ் குதித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இப்போது பெரும் அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் மகாராஷ்டிர அரசியலில் தொடர்ந்து திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.
இந்த அத்தனை குழப்பங்களையும் தொடங்கி வைத்தவர் சிவசேனாவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே! அவர் இரு நாட்களுக்கு முன்பு அதிருப்தி எம்எல்ஏக்கள் உடன் மாயமானார்.

மகாராஷ்டிரா
சிவசேனாவுக்கு மொத்தம் 55 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் பலர் ஷிண்டே பக்கம் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை கூட சிவசேனா எம்எல்ஏக்கள் இருவர் ஷிண்டே முகாமில் இணைந்ததாகக் கூறப்பட்டது. முதலில் குஜராத்தின் சூரத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் பின்னர், அசாம் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஷிண்டா
ஷிண்டாவால் மகாராஷ்டிராவின் கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேவும் தான் பதவி விலகத் தாயாராக உள்ளதாக நேற்று அறிவித்தார். தனது ராஜினாமா கடிதம் தயாராக உள்ளதாகவும் அதை அதிருப்தியாளர்கள் ஆளுநர் மாளிகையில் கொடுத்துவிடலாம் என்றும் தெரிவித்தனர். அத்துடன் நிற்காமல் அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் காலி செய்தார்.

திரிணாமுல்
இந்நிலையில், சிவசேனாவுக்கு ஆதரவாக இப்போது திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அஸ்ஸாம் தலைவர் ரிபுன் போரா தலைமையில் போராட்டம் நடந்த நிலையில், அங்குப் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அட்டாக்
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்க்க அசாமில் ஆளும் பாஜக அரசு நேரடியாக உதவிகளைச் செய்வதாக திரிணாமுல் கட்சியினர் சாடினர். மோசமான வெள்ளத்தால் அசாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் துயரைப் போக்க மாநில பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திரிணாமுல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

வெள்ளம்
பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் இருந்து இதுவரை 89 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் மக்களுக்கு உதவாமல் தாக்கரே அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திரிணாமுல் கட்சி சாடி உள்ளது.
Recommended Video

போராட்டம்
நேற்றைய தினம் தான் சூரத் நகரில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுஹாத்தியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். எம்எல்ஏக்கள் வரச் சற்று நேரத்திற்கு முன்பு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அங்கே இருந்தார். அதையெல்லாம் வைத்துத் தான் திரிணாமுல் காங்கிரஸ் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications