மோடிக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டமா? “ஜெய் பவானி” வார்த்தையை நீக்க மாட்டோம்: உத்தவ் தாக்கரே
மும்பை: பாஜகவுக்கு ஒரு விதி, எங்களுக்கு ஒரு விதியா? என சிவசேனா பாலாசாகேப் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிக்கு 'தீப்பந்தம்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமீபத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி பிரசார பாடல் ஒன்றை வெளியிட்டது.

அந்த பாடலில் 'இந்து', 'ஜெய் பவானி' போன்ற வார்த்தைகள் இடம்பெற்று உள்ளது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையம் தமது கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதற்காக உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.
உத்தவ் தாக்கரே கூறுகையில், "இந்து மதம் அல்லது கடவுளின் பெயரை சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கவில்லை. 'இந்து', 'ஜெய் பவானி' வார்த்தையை பயன்படுத்த கூடாது என கூறுவது மராட்டியத்தை அவமதிப்பது. அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் கூட்டங்களில் தொடர்ந்து 'ஜெய் பவானி', 'ஜெய் சிவாஜி' முழக்கங்கள் இடம்பெறும்.
தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பிரதமா் மோடி கர்நாடகாவில் மக்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என கூறி வாக்குப்பதிவு எந்திரத்தை அழுத்துங்கள் என கூறியதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை இலவசமாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்று அமித்ஷா வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
கடவுளின் பெயரை கூறி மோடி, அமித் ஷா ஆகியோர் ஓட்டு கேட்பது சரியா? இதுதொடர்பாக நாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. எங்களுக்கு ஒரு சட்டம், பாஜகவுக்கு ஒரு சட்டமா? தேர்தல் விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தால், இனிமேல் நாங்களும் எங்கள் கூட்டங்களில் ஹர ஹர மகாதேவ் எனக் கூறுவோம்.
மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கும் தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராவின் குல தெய்வமான துல்ஜா பவானி தேவியின் மீது இவ்வளவு வெறுப்பைக் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியாது. இன்று ஜெய் பவானியை அகற்றுங்கள், நாளை ஜெய் சிவாஜியை அகற்றுங்கள் என்று கூறுகின்றனர். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது கட்சி இந்துத்துவாவை கைவிட்டதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது. இப்போது பிரச்சாரப் பாடல்களில் இந்து வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக ஆளும் கட்சியின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது," என்று உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications