ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூடு போல ஜாமியா பல்கலை.யில் தாக்குதல்... உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற ஜாலியான் வாலாபாக் படுகொலையை போன்றது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சாடியுள்ளார்.

மும்பையில் மகாராஷ்டிரா விகாஸ் ஆகாதி கூட்டணியின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய உத்தவ் தாக்கரே, நாட்டின் குழப்ப நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Uddhav Thackeray compares Police action at Delhi Jamia to Jallianwala Bagh firing

மத்திய அரசு என்னதான் சாதிக்க நினைக்கிறது என தெரியவில்லை. நாட்டு மக்கள் பெரும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் இருக்கின்றனர். அரசியல் சாசனத்துக்கு எதிரான எந்த செயல்களும் நடைபெறாத வகையில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குடியுரிமை சட்ட திருத்தம் எந்த சித்தாந்தத்தின் மீது கொண்டுவரப்பட்டிருக்கிறது? சாவர்கரின் சிந்தனைகளுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்தம் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் போலீசார் நடந்து கொண்ட விதமானது அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் போல இருக்கிறது என விமர்சித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+