இதய அடைப்பு? உத்தவ் தாக்ரேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்ரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார். கடந்த 12ம் தேதி முதல் அவருக்கு உடல் நலப்பிரச்னை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
உத்தவ் தாக்ரேவுக்கு இதய தமனிகளில் அடைப்பு இருப்பது முதன் முறையாக கடந்த 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டிருந்தது. பின்னர் 2016ம் ஆண்டும் இதேபோல ஆஞ்சியோ செய்யப்பட்டது. இப்படி இருக்கையில் கடந்த 12ம் தேதி தசரா விழாவில் அவர் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு அவருக்கு திடீர் உடல் நலப்பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இதய தமனிகளில் மேலும் ஏதேனும் அடைப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், உத்தவ் தாக்ரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்+காங்கிரஸ் (மகா விகாஸ் அகாடி)கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியிருந்தது.
இப்படி இருக்கையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்கு உத்தவ் தாக்ரே முக்கியமான ஆளாக கருதப்படுகிறார். இச்சூழலில் உத்தவ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications