பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் சரத்பவார்.. தேவை இல்லாத குழப்பம்- சரத்பவார் மீது சிவசேனா பாய்ச்சல்!
மும்பை: பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது எதிர்க்கட்சிகளின் "இந்தியா "கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸை உள்ளடக்கிய 26 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா " கூட்டணியை உருவாக்கி உள்ளன. லோக்சபா தேர்தலுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டணியின் மூத்த தலைவராக இருப்பவர் சரத்பவார்.

எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் தலைமையில் ஒரு குழுவினர் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவில் இணைந்தனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் பலவீனப்படுத்தப்பட்டது.
பெங்களூர் கூட்டம்: இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தனர். ஆனால் ஒருவழியாக சரத்பவார், பெங்களூரில் 2-வது நாள் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
மோடியுடன் ஒரே மேடையில்: ஆனாலும் சரத்பவார் தொடர்ந்து "இந்தியா" கூட்டணியில் நீடிப்பாரா? இல்லையா? என்கிற சந்தேகத்தை சரத்பவார்- அதானி சந்திப்புகள் உள்ளிட்டவை வலுவாக உருவாக்கிக் கொண்டிருந்தன. இந்நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் நேற்று சரத்பவார் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி கோஷ்டி துணை முதல்வர் அஜித்பவாரும் பங்கேற்றனர். ஆனாலும் சரத்பவாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் "இந்தியா" கூட்டணியில் அதிருப்தியையும் புகைச்சலையும் கிளப்பி இருக்கிறது.
சிவசேனா கடும் அதிருப்தி: "இந்தியா" கூட்டணியின் மற்றொரு முக்கிய கட்சியான சிவசேனா இந்த அதிருப்தியை தமது சாம்னா நாளிதழில் வெளிப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா நாளிதழில் எழுதப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடிதான், தேசியவாத காங்கிரஸை ஊழல் கட்சி என முத்திரை குத்தியவர். அத்துடன் தேசியவாத காங்கிரஸை இரண்டாக பிளவுபடுத்தியதும் பாஜகதான். இத்தகைய நிகழ்ச்சிகளில் சரத்பவார் பங்கேற்பது தவறு இல்லைதான். ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் "இந்தியா" கூட்டணி என்ற பெயரில் ஒன்றிணைந்து நிற்கும் தருணத்தில் சரத்பவார் இப்படி பங்கேற்றிருப்பது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். மூத்த தலைவரான சரத்பவார் இதனைத் தவிர்த்திருக்கலாம். தமது நிலைப்பாடு குறித்து சரத்பவார் இனி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு சாம்னா நாளிதழில் எழுதப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications