சட்டி சுட்டதடா! பொது சிவில் சட்டத்துக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவு- அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்!
மும்பை: பொது சிவில் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்க ல் செய்யப்பட்டால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரிக்கும் என அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியை தொடர்ந்து உத்தவ் தாக்கரே சிவசேனாவும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன.

பொது சிவில் சட்டத்தை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இதுவரை நிலைப்பாடு எதனையும் அறிவிக்காமல் இருக்கிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகளில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பொது சிவில் சட்டத்தை தொடக்க நிலையில் ஆதரிப்போம் என கூறியது. சில நாட்களுக்கு முன்னர்தான் பாட்னாவில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மியும் பங்கேற்றது. ஆனால் மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்போம் எனவும் ஆம் ஆத்மி அறிவித்தது. இது எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு முயற்சிக்கு பின்னடைவாக பார்க்கபட்டது.
தற்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்போம் என அறிவித்துள்ளது. ஆம் ஆத்மியை தொடர்ந்து சிவசேனாவும் பொது சிவில் சட்ட மசோதாவை ஆதரிப்பது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
இதனிடையே உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைத்த குழு தமது அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications