மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு அடித்த யோகம்! ஓய்வூதிய திட்டம் அறிவித்த சில மணி நேரத்தில் ஏற்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது இருக்கும் என்.பி.எஸ் ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வர கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக மத்திய அரசு அறிவித்த சில மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது இருக்கும் என்.பி.எஸ் ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

pension ups union government

இந்த யுபிஎஸ் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம் என்ற 3 அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் ஒருவர் பணியாற்றி ஓய்வு பெறும் பட்சத்தில் அவர் கடைசி 12 மாதங்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் என்பது ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அதேபோல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். மத்திய அரசு ஊழியர் பணியின்போது இறந்தால் அவரது அடிப்படை சம்பளத்தில் 60 சதவீதம் வரை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு பலனளிக்கும் பல்வேறு திட்டங்கள் இருப்பதால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள்? ரயில்வே சம்மேளன தலைவர் தந்த குட்நியூஸ்


தற்போது இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில் 23 லட்சம் ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாநில அரசும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் இதை ஏற்றுக்கொண்டால், இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் எண்ணிக்கை 93 லட்சமாக உயரும்.

இதனிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிரா, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே மாநில அரசின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அடுத்த நாளே மகாராஷ்டிரா அரசு இதனை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நேற்று நடந்த அமைச்சரவையில் மகாராஷ்டிரா அரசு இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். மகாராஷ்டிராவில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா அரசை பின்பற்றி விரைவில் பாஜக ஆளும் மாநிலங்களும் இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+