காதலர் தின பரிசு.. இன்ஸ்டா நண்பனுக்கு அந்தரங்க புகைப்படம்.. 51 வயது பெண்ணுக்கு நடந்த கொடுமை
மும்பையைச் சேர்ந்த 51 வயதான திருமணமான பெண், காதலர் தினப் பரிசு பெற நினைத்து சுமார் 4 லட்சம் ரூபாயை இன்ஸ்டாகிராம் காதலனிடம் இழந்துள்ளார்,
மும்பை: மும்பையைச் சேர்ந்த 51 வயதான திருமணமான பெண்ணுக்கு, காதலர் தினப் பரிசுகளை அனுப்புவதாகக் கூறி "வெளிநாட்டவர்" ஒருவர் ரூ.3.68 லட்சத்தை ஏமாற்றி உள்ளார். இதையடுத்து அந்த பெண் மும்பை கார் ரோடு போலீசில் புகார் அளித்தார்.
காதலர் தினம் பிப்ரவரி 14ம்தேதி உலகம் முழுவதும் கொண்டாப்பட உள்ளது. காதலர்கள் தங்கள் காதலிக்கோ அல்லது காதலனுக்கோ காதலர் தினத்தை முன்னிட்டு பரிசுகள் மறக்க முடியாத அளவிற்கு பரிசுகளை வழங்குவது வழக்கம். அந்த காதலர் தின பரிசுக்காக நிறைய காதலர்கள் மெனக்கெடுவார்கள். இந்நிலையில் காதலர் தினத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
மும்பை கார் ரோடு பகுதியில் வசிக்கும் 51 வயது திருமணமான பெண்ணுக்கு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவருக்கு முன்பின் தெரியாத வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து நட்பு கோரிக்கை வந்தது. இந்த நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அந்த பெண், அவரை பற்றி விசாரித்திருக்கிறார். அவர் தன்னுடைய பெயர் அலெக்ஸ் லோரென்சோ என்றும், தான் லோரென்சோ கப்பலில் பணிபுரிந்ததாகவும், இத்தாலியில் உடற்பயிற்சி கூடம் நடத்துவதாகவும் கூறியிருக்கிறார். இதை அந்த 51வயது திருமணம் ஆன பெண்ணும் நம்பியிருக்கிறார்.

வாட்ஸ் அப் நெருக்கம்
ஆரம்பத்தில் சமூக ஊடங்களில் பேச ஆரம்பித்து, இவர்களது நட்பு பின்னாளில் வாட்ஸ் ஆப்பில் வளர்ந்ததாம். இவரும் மாறி மாறி வாட்ஸ் அப்பில் அரட்டை அடித்துக்கொண்டதுடன், தகவல்களை பரிமாறிக்கொண்டார்களாம். அலெக்ஸ் லோரென்சோ அந்தப் பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கூறிருக்கிறார். அவரும் தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

கூரியர் கட்டணம்
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8 அன்று, லோரென்சோ தனது காதலர் தினப் பரிசுகளை அனுப்ப அவளது முகவரியைக் கேட்டிருக்கிராம். பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி கூரியர் கட்டணத்தைச் செலுத்தச் சொன்னாராம். இந்நிலையில் பிப்ரவரி 10 அன்று, ஒரு கூரியர் நிறுவனம் அந்த பெண்ணிடம் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதையடுத்து அந்த பெண்ணும் 72,450 செலுத்தினாராம்.

இன்ஸ்டாகிராம் காதலன்
இந்நிலையில் பரிசில் வெளிநாட்டு கரன்சி இருந்ததால், இது பணமோசடி விவகாரம் இல்லை என்று சான்றிதழைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி, ரூ.2.65 லட்சம் செலுத்துமாறு கூறியிருக்கிறார்கள். அதன் பிறகும் ரூ.31,250 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். இப்படி பணம் கேட்ட போதெல்லாம் அந்த பெண்ணும் இன்ஸ்டாகிராம் காதலனுக்காக அனுப்பி வைத்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் ஏதோ தவறாக இருக்கிறதே என்று உணர்ந்த பெண், பணம் கொடுக்க முடியாது என்று இன்ஸ்டாகிராம் நண்பருடன் அந்தப் பெண் வாக்குவாதம் செய்தார்.

இழந்த பணம்
உடனே மர்மநபர் என்னிடம் உன் அந்தரங்கப் புகைப்படம் இருக்கிறது. அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன்' என்று மிரட்டியிருக்கிறார், அதன் பிறகுதான் அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தார். இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.3.68 லட்சத்தை இழந்திருக்கிறார். இது குறித்து அந்தப் பெண் மும்பை கார்ரோடு போலீஸில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் போலீஸார் மோசடி வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைக் கைதுசெய்ய தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். காதலனிடம் காதலர் தின பரிசு வாங்க ஆசைப்பபட்ட 51 வயது திருமண பெண், கடைசியில் சுமார் 4லட்சம் ரூபாய் ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications