இதுதான் லாஸ்ட் சான்ஸ்! ரூ.9000 கோடியை ஏப்பம் விட்ட விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரூ.9000 கோடி வங்கி மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, கடந்த 2017ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றார். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்நிலையில், நீதிமன்றம் அவருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, விஜய் மல்லையா என்பவர் நாடு கடத்தப்பட்ட பொருளாதார குற்றவாளி. இந்த குற்றச்சாட்டை எதிர்த்து, விஜய் மல்லையா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

Vijay Mallya Bombay High Court

இந்த வழக்கு, நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதிகள் அதிரடியான கருத்துக்களை கூறியிருக்கின்றனர். அதாவது, மல்லையா இந்தியா திரும்பி, நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வந்தால் மட்டுமே அவரது மனுவை பரிசீலிக்க முடியும் என நீதிபதிகள் தெளிவுப்படுத்தியிருக்கின்றனர்.

மல்லையா இங்கிலாந்திலிருந்து எப்போது திரும்புவார் என்பதைக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டிசம்பர் 23 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தவிதமான பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அமர்வு சுட்டிக்காட்டியது.

"நீங்கள் இந்திய மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களின் சட்ட செயல்முறைகளைத் தவிர்ப்பதால், தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் பயனைப் பெற முடி முடியாது.

அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மல்லையாவின் பிரமாணப் பத்திரம் வங்கிகளின் கடன் மீட்பு கோரிக்கைகளை மறுத்து, வழக்கின் கவனத்தை திசைதிருப்ப முயல்வதாகத் தெரிவித்தார். 2018 சட்டத்திற்கு எதிரான வழக்கு, மல்லையா தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டு, லண்டனில் நாடு கடத்தும் நடவடிக்கைகள் முடிவுக்கு வர இருந்த பின்னரே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.

மேத்தா மேலும், மல்லையா இந்தியா திரும்பி, தனது நிதியியல் பொறுப்புகள் பற்றிய கோரிக்கைகள் உட்பட அனைத்து வாதங்களையும் இந்திய நீதிமன்றங்களில் முன்வைக்கலாம் என வலியுறுத்தினார். ஆனால், நாட்டின் சட்ட அமைப்பிற்கு அடிபணிய மறுப்பவர், அதனிடமிருந்து சமத்துவ நிவாரணத்தை நாட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் மல்லையா எப்போது திரும்புவார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற முந்தைய உத்தரவு இன்னும் பின்பற்றப்படவில்லை என்பதை மீண்டும் தெளிவுப்படுத்தியது. மட்டுமல்லாது உங்கள் மனுவை நியாயமாக, நாங்கள் நிராகரிக்கவில்லை. மற்றொரு வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறோம் என்று அமர் கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+