சொத்து மதிப்பு 1300 கோடி! மிரட்டும் விராட், அனுஷ்கா ஜோடி! ஒரு இன்ஸ்டா பதிவுக்கு 9 கோடி!
மும்பை: விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து சுமார் 1300 கோடி சொத்து சேர்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பொதுப்போக்கு துறையில் பணக்கார ஜோடி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அந்தச் செய்தி அவரது ரசிகர்கள் இடையே கொஞ்சம் கவலையை உண்டாக்கி இருக்கிறது. இந்த முடிவை அவர் இப்போது எடுக்கவில்லை என்றும் ஆறு மாதங்கள் முன்னதாகவே எடுத்துவிட்டார் என்றும் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விராட் கோலி கிரிக்கெட் உலகில் எந்தளவுக்கு தனிப்பெரும் வீரராக வலம் வருகிறாரோ அதே அளவுக்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்தான் அவரது மனைவி அனுஷ்கா சர்மா. இந்த ஜோடி வாங்கி குவித்துள்ள சொத்து மதிப்பு பற்றிய ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஜோடிக்கு கடந்த 2017 டிசம்பர் 11 அன்று இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கனில் திருமணம் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த ஜோடி எண்டர்டெய்ன்மெண்ட் துறையில் கோலோச்சு வருகின்றது. அது மட்டுமல்ல ஜிக்யூ வெளியிட்டுள்ள செய்தியின் படி இவர்கள் இருவரும் நாட்டில் பணக்கார தம்பதியாக வலம் வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தம்பதியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நிகர மதிப்பு 1300 கோடி. ஆத்தாடி என யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
விராட் கோலிக்கு எந்த வழிகளில் எல்லாம் வருமானம் கிடைக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம். சர்வதேச கிரிக்கெட் வீரராக வலம் வரும் விராட் பிசிசிஐ மூலம் கிரேட் ஏ+ ஒப்பந்தங்களில் மூலம் மட்டும் வருடத்திற்கு 7 கோடி ரூபாய் வருமானம் பார்க்கிறார். டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க 15 லட்சம் ரூபாயும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க 6 லட்சமும், டி20க்கு 3 லட்சம் ரூபாயையும் சம்பளமாகப் பெற்று வருகிறார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அவர் ஆடுவதன் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட 15 கோடி ரூபாட் சம்பாதித்து வருவதாக தெரிகிறது.
பிரண்ட் விளம்பரங்கள் மூலம் மட்டும் அவருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பது அடுத்த நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம். அவர் பிராண்ட் விளம்பரங்களில் முகத்தைக் காட்டி நடிப்பதற்கு சுமார் ஏழரை கோடியிலிருந்து 10 கோடி வரை பணம் பெற்றுவருகிறார். மேலும் இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி அவர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வருமானம் பார்த்து வருகிறார். அதாவது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பொருளை விளம்பரப்படுத்த 8.9.கோடி ரூபாய் வாங்குகிறார். அதேபோல எக்ஸ் தளத்தில் ஒரு விளம்பரத்தைப் பதிவிடுவதற்கு சுமார் 2.5 கோடி வரை பெறுகிறார்.
இவை மட்டும் இல்லாமல் அவர் நிறைய தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதாவது ரெஸ்டாரண்ட் மட்டும் ஆடை நிறுவனங்களில் கூட முதலீடு செய்து வைத்துள்ளார். கூடவே ஸ்டார்ட்அப்ஸ் தொழில்களை அடையாளம் கண்டு அதிலும் முதலீடு செய்து சம்பாதித்து வருகிறார்.
அனுஷ்கா சர்மாவின் வருமானம் எப்படி? :இவருக்கு முக்கியமான வருமான திரைத்துறையில் நடிப்பதன் மூலம் வருகிறது. அதாவது படத்திற்கு 7 கோடி வரை பெறுகிறார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜூலன் கோஸ்வாமி பற்றிய தயாரிக்கப்பட்டு வரும் சக்டா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் இவர் இந்தளவுக்கான சம்பளத்தைப் பெற்றுள்ளதாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
ராப் நே பனா டி ஜோடி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளதன் மூலமும் அனுஷ்காவுக்கு வருமானம் வருகிறது. வேறு சில பிராண்ட் நிறுவனங்களில் இணைந்து இவர் பிசினஸ் செய்து வருவதன் மூகம் ஆண்டுக்கு 5 கோடி முதல் 10 கோ வரை சம்பாதித்து வருகிறார். சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்ய 95 லட்சம் வருமானமாகப் பெறுகிறார்.
மேலும் அனுஷ்கா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் 2013 முதல் கூட்டு நிறுவனராக உள்ளார். சகோதரர் கர்னேஷ் சர்மா வெப் சீரியஸ் பலவற்றை தயாரித்து வெளியிட்டு வருகிறார். அதன் மூலம் அனுஷ்காவுக்குப் பணம் வருகிறது. இது மட்டும் இல்லாமல் அவர் பேஷன் ஆடையகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை டேடித்தேடிப் போய் முதலீடு செய்து வருகிறார்.
இவ்வாறு அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் சேர்ந்து கிட்டத்தட்ட 1300 கோடி மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளன. அதில் விராட் கோலியின் சொத்து மதிப்பு மட்டும் 1050 கோடி ஆகும். அனுஷ்காவின் சொத்து சுமார் 255 கோடியாக உள்ளது. இந்த ஜோடி பொதுப்போக்கு துறையில் மிகப் பணக்கார தம்பதியாக இதன் மூலம் மிகப் பெரிய உயரத்தை தொட்டுள்ளது. இவர்களுக்கு இணையாக இப்போதைக்கு வேறு யாரும் இந்தப் புகழைச் சம்பாதிக்கவில்லை. ஆகவே, அனைத்து பிராண்ட் கம்பெனிகளின் கண்களும் இந்த ஜோடியைச் சுற்றியே வலம் வர ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications