சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்: வாக்குப்பதிவில் வேகம் காட்டும் ஜார்க்கண்ட்! மகாராஷ்டிராவில் சுணக்கம்!
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகின்றன. பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவில் ஜார்க்கண்ட் மக்கள் வேகம் காட்டி வருகின்றனர். மகாராஷ்டிராவை பொறுத்தவரை லேசான சுணக்கம் இருக்கிறது.
மகாராஷ்டிரா: கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களை இம்மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த சிவசேனா+காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி பெரும்பான்மையை இழந்து ஆட்சியை பறிகொடுத்தது. இதற்கு காரணம் உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் இருந்து ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜகவுக்கு ஆதரவளித்தார். மட்டுமல்லாது நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் உரிமை கோரி நீதிமன்றத்தை நாடி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அதே பாணியில், தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த அஜித் பவார் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் தனிக்கட்சியாக உருவெடுத்து பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து பாஜவுடன் கைகோர்த்து 'மகாயுதி' கூட்டணியை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணியே தற்போது ஆட்சியில் இருக்கிறது. எனவே, இத்தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தேர்தல்: இம்மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 4,135 வேட்பாளர்கள் இருக்கிறார்கள். 9.70 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் வாக்களிக்க 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மகாயுதி கூட்டணியை பொறுத்த வரை சீட் ஷேரிங்கில் பெறும் பஞ்சாயத்து வெடித்திருந்தது. என்னதான் ஷிண்டே முதல்வராக இருந்தாலும் அவர் சார்ந்த கட்சிக்கு அதிக சீட்டுகள் ஒதுக்க முடியாது என்று பாஜக கராறாக சொல்லிவிட்டது. இதே நிலைமைதான் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கும்.
சீட் ஷேரிங்: எனவே, இரு கட்சிகளுக்கும் முறையே 81, 59 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, 149 தொகுதிகளில் பாஜக தனியாக களம்காண்கிறது. மறுபுறம் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியை பொறுத்தவரை, காங்கிரஸ் 101, உத்தவ் சிவசேனா 95, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளில் களம்காண்கின்றன. தவிர பகுஜன் சமாஜ் 237 தொகுதிகளில் தன்னிச்சையாக போட்டியிடுகிறது.
முக்கிய தொகுதிகள்: கோப்ரி-பச்பகாடி, நாகபுரி தென்மேற்கு, பாராமதி, சகோலி, வொர்லி உள்ளிட்ட தொகுதிகள் ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது. இதில் கோப்ரி-பச்பகாடியில் மகாராஷ்டிரா முதல்வரான ஷிண்டே போட்டியிடுகிறார். நாகபுரியில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும், பாராமதியில் அஜித் பவாரும், ககோலியில் நானா படோலும், வொர்லியில் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரேவும் களம் இறங்கியுள்ளனர். இவர்களின் வெற்றி தோல்வியை மொத்த மாநிலமும் உண்ணிப்பாக கவனித்து வருகிறது.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலமும் சமீக காலமாக அரசியல் சிக்கல்கள் அதிகம் உள்ள மாநிலமாக பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டை எழுப்பியிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை கைதும் செய்தது. பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறையால் முதல்வர் ஒருவர் நேரடியாக கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று பேசப்பட்டது. இதனையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன், சம்பாய் சோரனை இடைக்கால முதல்வராக்கினார்.
தேர்தல்: வழக்கை எதிர்கொண்டு சில மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த ஹேமந்த், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், முதல்வர் பதவியை இழந்த சம்பாய் அதிருப்தியடைந்து பாஜகவில் இணைந்துவிட்டார். இப்படி இருக்கையில்தான் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த 13ம் தேதி 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் முக்கிய தொகுதியாக பர்ஹைத், கண்டே, தும்கா, தன்வர் ஆகியவை இருக்கின்றன. பர்ஹைத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் களம் காண்கிறார். அவரது மனைவி கல்பனா கண்டே தொகுதியிலும், ஹேமந்தின் சகோதரன் வந்த் தும்காவிலும் போட்டியிடுகின்றனர். பாஜக மாநில தலைவர் தன்வரிலும், ஜார்க்கண்ட் மாணவர் சங்க தலைவர் சில்லி தொகுதியிலும் போட்டியிடுகிறாார்.
இரு மாநிலங்களிலும் பாஜக பலமாக காலூன்றியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி டஃப் கொடுக்குமா? என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
வாக்குப்பதிவு நிலவரம்: பகல் 1 மணி நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 32.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 47.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications