மருந்து தடவணும்.. அறுவை சிகிச்சைக்கு போன பெண்ணை அலறவைத்த வார்டுபாய்.. ஷாக்
மும்பை: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு வார்டுபாய் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வார்டுபாயை மும்பை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ள மருத்துவமனைக்கு அண்மையில் அறுவை சிகிச்சைக்காக இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் அந்த பெண். அங்கு வார்டு பாயாக இருந்த இளைஞர் பொய் காரணங்களைக்கூறி அந்த பெண்ணின் பிரைவேட் இடங்களில் மருந்துகளை தடவி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அளித்த புகாரை ஏற்று, போலீசார் வார்டு பாய் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்கள். அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட வார்டுபாயை கைது செய்துள்ளனர். குற்ற சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல்கள் தெரியவரவில்லை. போலீசார் சில தகவல்களை மட்டும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications