பிணங்களை வீச எங்களிடம் நதிகள் இல்லை.. உத்தர பிரதேசத்தை "குட்டிய" மும்பை மேயர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சடலங்களை வீசுவதற்கு எங்களிடம் நதிகள் கிடையாது என்று மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பட்னேகர் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் சடலங்களை கங்கை நதியில் வீசி எறிந்த சம்பவம் தொடர்பாக இவ்வாறு மேயர் கருத்து தெரிவித்துள்ளார்.

We dont have any river to dump the covid patient bodies says Mumbai Mayor Kishori Pednekar

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் மேற்கு மும்பை பகுதியில் உள்ள மலாடு என்ற இடத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த கட்டிட விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தண்டனை பெற்று தரப்படும் . மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிட விபத்துக்கு சிவசேனா மீது பாஜக குற்றம் சாட்டுகிறது . தங்களை மட்டும்தான் ரொம்பவே நியாயவான்கள் என்று பாஜக நினைத்துக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யை எப்போதுமே மும்பை மாநகராட்சி குறைத்துக் காண்பித்தது கிடையாது. அதுபோல செய்யப்போவதும் கிடையாது. நோயாளிகளின் உடல்நிலை வீசி எறிவதற்கு எங்களிடம் ஆறுகள் கிடையாது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நாங்கள் மதிக்கிறோம் . உரிய முறையில் இறப்பு சான்றிதழை அவர்களுக்கு வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.

Recommended Video

    UP The parallel Universe | Uttar Pradesh-ல் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும்

    உத்தரபிரதேச மாநிலத்தில் மே 10ஆம் தேதி கங்கை நதியில் 71 சடலங்கள் மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் சடலங்களை நதியில் வீசி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கொரோனா பாதிப்பில் மும்பை மாநகராட்சி பாஜக குற்றம்சாட்டுகிறது. எனவே இதை சொல்லி காட்டும் வகையில் மும்பை மேயர் தங்களிடம் அப்படி நதி இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+