வெறுப்பு பேச்சு.. இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறோமா.. பேஸ்புக் திட்டவட்ட மறுப்பு
மும்பை: நாங்கள் யாருடைய அரசியல் நிலைப்பாட்டையும் பொருட்படுத்தாமல் வெறுக்கத்தக்க பேச்சை நாங்கள் தடைசெய்கிறோம் என இந்தியாவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை பேஸ்புக் மறுத்துள்ளது.
Recommended Video
அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது.
அதேபோல் பாஜக மட்டுமின்று வேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் போஸ்டுகளையும் பேஸ்புக் அனுமதிக்கிறது என்றும் இந்தியாவில் அரசை எதிர்த்தால் தங்களின் மார்க்கெட் மோசமாகிவிடும் என்று பேஸ்புக் மௌனம் காப்பதாக கூறப்பட்டுள்ளது.

கட்டுரையில் கருத்து
Facebooks Hate-Speech Rules Collide With Indian Politics என்ற பெயரில் அந்த கட்டுரையில்,. இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் சில முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும். வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுளளது.

தலையீடு இருந்தது
குறிப்பாக இதற்கு உதாரணமாக. பாஜகவின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங்கின் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போஸ்ட்களை புகார் அளித்தும் பேஸ்புக் நீக்கியது இல்லை, என்றும் பேஸ்புக்கில் இருக்கும் சிலர் தலையிட்டு இவரின் வெறுப்பு பேச்சுக்களை நீக்க கூடாது என்று கூறியதாகவும் வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழத்த வேண்டும் என்றும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இவரின் கணக்கை நீக்க கூடாது என்று இந்திய பேஸ்புக் குழுவில் இருக்கும் சிலர் அழுத்தம் கொடுத்தனாராம். வரின் சில பேஸ்புக் போஸ்ட்களை மட்டும் பேஸ்புக் நீக்கி இருக்கிறதாம். இதுமட்டுமின்றி பாஜகவின் கபில் மிஸ்ரா, அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் போஸ்ட்களை பேஸ்புக் நீக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பட்டுள்ளது.

அரசியல் களம் சூடானது
இதனிடையே ஆளும் கட்சியினரின் வெறுப்பு பேச்சுக்கள் எதையும் நீக்குவது இல்லை என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டிருந்த கட்டுரையை எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். இதனால் பாஜக காங்கிரஸ் இடையே இந்த விவகாரத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

பேஸ்புக் அளித்த விளக்கம்
பெரும் சர்ச்சையான நிலையில் பேஸ்புக் நிறுவனம் இந்த புகார்களை மறுத்துள்ளது. நாங்கள் அனைத்து வெறுப்பு பேச்சுக்களையும் ஒன்றாகவே அணுகுகிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்திய பேஸ்புக் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில். "வன்முறையைத் தூண்டும் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் உள்ளடக்கத்தை நாங்கள் தடைசெய்கிறோம், யாருடைய அரசியல் நிலைப்பாடு அல்லது கட்சி இணைப்பையும் பொருட்படுத்தாமல் உலகளவில் இந்தக் கொள்கைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை செயல்படுத்துவதில் முன்னேற்றம் அடைகிறோம், நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்த எங்கள் செயல்முறையின் வழக்கமான தணிக்கைகளை நடத்துகிறோம்" என்றார்
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications