ஓட்டல் அறையில் பெண் டாக்டர் கையில் குறிப்புடன் இருந்த கோலம்.. மகாராஷ்டிராவை உலுக்கிய எஸ்ஐ இவர் தான்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் பல்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் 28 வயது பெண் டாக்டர், ஓட்டல் அறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் இரவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்த போது அவர் உயிருடன் இல்லை. அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், அங்குள்ள சத்தாரா மாவட்டம் பல்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இளம் பெண் டாக்டர், அருகே உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறார்.

ஆனால் நேற்று பெண் டாக்டர் நேற்று முன்தினம் ஓட்டல் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெண் டாக்டர் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே பெண் டாக்டர் தனது உள்ளங்கையில் தற்கொலை குறிப்பை எழுதியிருக்கிறார். அதில் சத்தாரா போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தன்னை கடந்த 5 மாதமாக பலாத்காரம் செய்ததாகவும், சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் பங்கர் என்பவர் தனக்கு மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பில் கூறியிருந்தார். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கடித வடிவில் தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைப்பார்கள். ஆனால் இந்த வழக்கில் உயிரைவிட்ட பெண் டாக்டர் உள்ளங்கையில் காரணத்தை எழுதியிருந்தார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியது. இதையடுத்து பெண் டாக்டர் குற்றம்சாட்டிய போலீஸ் அதிகாரியை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யும்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே, சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்த் பங்கர் ஆகியோர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் பதிவு செய்தனர். மேலும் டாக்டரின் தற்கொலை குறிப்பின் அடிப்படையில் தீவிர விசாரணையை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகியோர் எந்த நேரமும் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளதால், மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications