"ஐ" விக்ரம் நினைவிருக்கா? பெண்கள், குழந்தைகளையும் விடல.. அனைவருக்கும் முடி கொட்ட என்ன காரணம்! ஷாக்
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு ஊர் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடி கொட்டி வழுக்கைத் தலை ஏற்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக மருத்துவக் குழு அளித்த ரிப்போர்ட் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்த காலத்தில் திடீர் திடீரென புதிய புதிய நோய்கள் பரவி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா எந்தளவுக்கு நம்மை வைத்துச் செய்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

வழுக்கை தலை
இதற்கிடையே கடந்த மாதம் வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்திலுள்ள ஷேகான் என்ற ஊரில் வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அதாவது அந்த ஊரைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு திடீரென வழுக்கைத் தலை ஏற்பட்டது. ஆண், பெண் என வித்தியாசமின்றி அனைவருக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அஞ்சினர்.
அங்கு அனைவருக்குமே கிட்டதட்ட ஒரே அறிகுறி தான் இருந்துள்ளது. அதாவது மக்களுக்கு முதலில் உச்சந்தலையில் கடுமையான அரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. சாதாரண அரிப்பு தான் என சொரிய தொடங்கினால் மொத்தமாக முடி கொட்டிவிடுகிறது. சில நாட்களில் மொத்தமாக முடி கொட்டி விடுவதாக அப்பகுதி மக்கள் கூறினர். சில நாட்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 150க்கும் அதிகமானோருக்கு இதுபோல முடி கொட்டியுள்ளது.
ஆய்வு
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக வல்லுநர் குழு விசாரணை நடத்தியுள்ளனர்.. டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் நேரில் சென்று கள ஆய்வு செய்துள்ளார். அதில் அந்த கிராம மக்கள் உண்ணும் கோதுமையில் உள்ள நச்சுத்தன்மை காரணமாக இதுபோல நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் பவாஸ்கர் ஒரு மாதம் களத்தில் இருந்து ஆய்வு செய்துள்ளார். அதில் அங்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையில் செலினியம் அதிகமாகவும் துத்தநாகம் (zinc) குறைவாகவும் இருந்தது தெரிய வந்தது. இதுவே முடி கொட்டும் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
என்ன காரணம்
இது தொடர்பாக டாக்டர் பாவாஸ்கர் மேலும் கூறுகையில், "குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோதுமையை ஆய்வு செய்ததில் ஒரு விஷயத்தை நா்கள் கண்டறிந்தோம். அதாவது அங்கு வழக்கமாக விளையும் கோதுமையில் உள்ள செலினியத்தை விட 600 மடங்கு அதிகமாக செலினியம் இருந்துள்ளது. அதிகளவு செலினியம் என்பது அலோபீசியா நோயை ஏற்படுத்தலாம். இLன் காரணமாகவே கிராமங்களில் 3 முதல் 4 நாட்களில் எல்லாருக்கும் தலையில் அரிப்பு ஏற்பட்டு முடி கொட்டி இருக்கிறது" என்றார்.
கோதுமை மாதிரிகள் தானேவின் வெர்னி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. செலினியம் அளவு வழக்கமாக 1.9 மி.கி/கிலோ என்றே இருக்க வேண்டும். ஆனால், இதில் 14.52 மி.கி/கிலோ என இருந்துள்ளது. இந்த கோதுமை அனைத்தும் பஞ்சாபிலிருந்து வந்தவை என்றும் டாக்டர் பவாஸ்கர் குறிப்பிட்டார்.
செலினியம் அதிகம்
அவர் மேலும் கூறுகையில், "பாதிக்கப்பட்ட நபர்களின் ரத்தம், சிறுநீர் மற்றும் முடி மாதிரிகளையும் நாங்கள் அனுப்பினோம். அதில் செலினியம் ரத்தத்தில் 35 மடங்கும், சிறுநீரில் 60 மடங்கு, முடியில் 150 மடங்கும் அதிகம் இருந்தது தெரிய வந்தது. இந்தளவுக்கு அதிகப்படியான செலினியம் உட்கொள்வதே முடி கொட்டக் காரணமாக இருந்துள்ளது. செலினியம் அதிகரித்தே முடி கொட்டி வழுக்கைத் தலை அமையக் காரணமாக இருந்துள்ளது.
8 வயது முதல் 72 வயது வரை அனைவருக்கும் முடி மொத்தமாகக் கொட்டிவிட்டது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதைக் கூட நிறுத்திவிட்டனர். இதனால் அவர்களுக்கும் தேவையான கவுன்சிலிங் வழங்க அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications