யார் அந்த மர்ம பெண்? ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மாடல் அழகி.. கப்பலுக்குள் வந்தது எப்படி?
மும்பை: நேற்று மும்பை அருகே சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி நடத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 13 பேர் போலீசார் மூலம் விசாரிக்கப்பட்டனர். பல பிரபலங்களை போலீசார் விசாரித்த நிலையில் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து கோவா செல்லும் பார்ட்டி கப்பலில் இவர்கள் போதை பொருளை பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மாறுவேடத்தில் உள்ளே சென்ற அதிகாரிகள் அங்கு பார்ட்டி நடத்தியவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
ரகசிய தகவல் அடிப்படையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகனை போலீசார் கஸ்டடியில் எடுக்க முயன்று வருகிறார்கள்.

முன்முன் தமேச்சா யார்?
இந்த கைதின் போது முன்முன் தமேச்சா என்ற இளம் பெண் ஆர்யன் கானுடன் இருந்தார். இந்த மர்ம பெண் முன்முன் தமேச்சா குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்முன் தமேச்சா என்பவர் ஒரு மாடல் ஆவார். இவருக்கு வயது 39. மத்திய பிரதேசம் அருகே இருக்கும் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவர் பெரிய பணக்கார பின்னணியை சேர்ந்தவர் கிடையாது. சாஹாரில் படித்தவர் அதன்பின் போபாலில் வாழ்ந்து வந்தார். 6 வருடங்களுக்கு முன் டெல்லிக்கு இவர் குடிபெயர்ந்தார்.

இன்ஸ்டா பிரபலம்
இன்ஸ்டாகிராமிலும் முன்முன் தமேச்சா அவ்வளவு பிரபலம் கிடையாது. இவரை பெரிதாக நடிகர், நடிகைகள் யாரும் பின் தொடரவில்லை. இவரை மொத்தமாக 10.3 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்கிறார்கள். சிலர் நடிகர், நடிகைகள் இவர் பின் தொடர்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது இவர் போஸ்ட்களை போட்டு வந்துள்ளார்.

எப்படி வந்தார்?
இந்த நிலையில்தான் அவ்வளவு பிரபலம் இல்லாத முன்முன் தமேச்சா மும்பையில் எப்படி சொகுசு கப்பலிற்குள் வந்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த கப்பலில் முழுக்க முழுக்க பிரபலங்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருந்துள்ளனர். 80 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தவர்களுக்கே இந்த கப்பலில் கடைசி நேரத்தில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் போது பெரிய பொருளாதார பின்னணி இல்லாத முன்முன் தமேச்சா எப்படி அந்த கப்பலுக்குள் வந்தார் என்று தெரியவில்லை.

ஆர்யன் கான்
யார் பரிந்துரையின் மூலம் கப்பலில் இவருக்கு இடம் கிடைத்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்முன் தமேச்சா மாடல் என்பதால் அதன் வழியாக ஏற்பட்ட நட்புகள் மூலம் கப்பலுக்குள் வந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலில் இன்னும் சில மாடல்கள் இருந்துள்ளனர். இதனால் ரேவ் பார்ட்டி நடனம் அல்லது அது தொடர்பான அந்தரங்க காரணங்களுக்காக இவர் கப்பலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெருக்கம்
முன்முன் தமேச்சா கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானுடன் அருகில் இருந்துள்ளார். கைதின் போது இருவரும் நெருக்கமாக அருகில் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்முன் தமேச்சா யார் என்று தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இவருக்கும் போதை கும்பலுக்கும் தொடர்புகள் இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications