Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக சென்ற சல்மான்.. ஷாரூக்கான் மகனுக்காக களமிறங்கும் முக்கிய வழக்கறிஞர்.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: போதை பொருள்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானுக்காக மூத்த வழக்கறிஞர் சதீஷ் மனேஷிந்தே ஆஜராகிறார். இவர் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், சல்மான் கான் உள்ளிட்டோருக்கு ஆஜராகியுள்ளார்.

மும்பை கடலோரத்தில் கோவாவுக்கு சொந்த கப்பல் ஒன்றில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை பொருள்கள், பெண்களின் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கப்பலில் பயணிகள் போல் மாறுவேடத்தில் சென்று அங்கிருந்தவர்களை பிடித்தனர். அங்கிருந்து 13 கிராம் கோகைன், 5 கிராம் எம்டி, 21 கிராம் சாராஸ், 22 எக்ஸ்டாசி மாத்திரைகள்,ரூ 1.33 லட்சம் பணம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

ஷாரூக் கான்

ஷாரூக் கான்

இதையடுத்து அந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக ஷாரூக் கான் மகன் ஆர்யான் கானிடம் விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தனது படப்பிடிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வந்துள்ள ஷாரூக் கான் தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சித்து வருகிறார்.

வழக்கறிஞர் சதீஷ்

வழக்கறிஞர் சதீஷ்

இதற்காக மும்பை பாலிவுட் பிரபலங்கள் விரும்பும் மூத்த வழக்கறிஞர் சதீஷ் மனிஷிந்தேவை நியமிக்க ஷாரூக் கான் விரும்பினார். இதற்காக ஷாரூக் கான் நேராக சல்மான் கானை போய் பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து வழக்கறிஞர் சதீஷை சந்தித்து ஆர்யான் கான் வழக்கு குறித்து பேசியுள்ளனர்.

சல்மான் கான்

சல்மான் கான்

தனது மகனை ஜாமீனில் எடுப்பதற்காக சல்மான் கானை ஏன் ஷாரூக் கான் போய் பார்த்தார் என உங்களுக்கு கேள்வி எழலாம். ஆம்! சதீஷ் பாலிவுட் பிரபலங்கள், அவர்களது குடும்பத்தினருக்காக வாதாடி பெயர் பெற்றவர் 56 வயதாகும் சதீஷ், 1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்திற்காக ஆஜராகி ஜாமீன் பெற்றார். சஞ்சய் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவருக்காக ஆஜராகி ஜாமீன் பெற்று தந்தார்.

சல்மான் கான்

சல்மான் கான்

அதுபோல் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி சாலையோரம் இருந்தவர்கள் மீது ஏற்றிய வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் தனது வாதத்தால் சல்மானை நீதிமன்றம் விடுவித்தது. அது போல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பிறகு போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷௌவிக்கிற்காக ஆஜராகினார். இருவருக்கும் ஜாமீன் பெற்றும் தந்தார்

1983 ஆம் ஆண்டு தொடங்கினார்

1983 ஆம் ஆண்டு தொடங்கினார்

மும்பையில் கிரிமினல் வழக்கறிஞர்களில் முன்னணியில் உள்ளவர் சதீஷ் மணீஷிந்தே. இவர் தனது பணியை 1983 ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் மறைந்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். பால்கர் தாக்குதல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக சதீஷ் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+