"தலையே சுத்துது".. கடிச்சு வெச்சிட்டாராம் மனைவி.. குறுக்கே மாமியார்.. காரணம் கேட்டால் ஆடிபோயிடுவீங்க
கணவன் திருமண தேதியை மறந்தால் ஒரு பெண் ஆவேசமாக உடம்பெல்லாம் கடித்து வைத்துள்ளார்
மும்பை: கணவர் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர் விவாகரத்து வரை சென்றுள்ளார்.. இந்த பெண் விவாகரத்து வரை சென்றதுகூட பிரச்சனை இல்லை.. ஆனால், விவாகரத்துக்கு இவர் சொன்ன காரணம் இருக்கே? அங்கேதான் இடிக்குது.
மும்பையின் காட்கோபரில் வசித்து வருகிறார்கள் அந்த தம்பதியினர்.. கணவர் பெயர் விஷால் நங்ரே.. 32 வயாகிறது.. மனைவி பெய்ர கல்பனா.. 32 வயதாகிறது..
ஒரு கொரியர் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் விஷால்.. கல்பனா, அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

மணநாள் விழா
கடந்த பிப்ரவரி 18, 2018ம் தேதிதான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது... அதாவது கல்யாணம் ஆகி இவர்களுக்கு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த 18ம் தேதி 6வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர்.. அதனால், இந்த பிப்ரவரி 18ம் தேதி, தங்களுடைய கல்யாண நாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக கல்பனா நிறைய பிளான்களை செய்துள்ளார்.. இதனால், பிப்ரவரி 18-ம் தேதிக்கு முன்பு, தன்னுடைய பிளானை பற்றி விஷாலிடம் சொல்லி உள்ளார் கல்பனா.. ஆனால், விஷாலுக்கு அவருடைய திருமண நாளே மறந்துப்போய்விட்டது.

கல்பனா கல்பனா
நம் திருமண நாள் தேதி எப்போது? என்று கல்பனா கேட்கவும், திருதிருவென விழித்துள்ளார் விஷால்.. இதனால் கல்பனாவுக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. உடனே சண்டையும் ஆரம்பமாகிவிட்டது.. வழக்கமாக எப்போதுமே கல்பனா இப்படித்தான் சண்டை போடுவாராம்.. உடனே விஷாலும், மனைவியை சமாதானப்படுத்துவாராம்.. அந்தவகையில், சம்பவத்தன்றும், ஆவேசத்துடன் காணப்பட்ட கல்பனாவை, விஷால் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், கல்பனா அந்த பிரச்சனையை விட்டு வெளியே வரவேயில்லை.. அன்றைய தினம் என்றில்லாமல், மறுநாளும் அதே சண்டையை தொடர்ந்தார்.

கெட்ட கெட்ட வார்த்தை
அன்றைய தினம் சாயங்காலம், விஷால் தன்னுடைய வீட்டுக்கு வெளியில் காரை கழுவி கொண்டிருந்தார்.. அப்போது வேலை முடிந்து கல்பனா வந்துள்ளார்.. அப்போதும் அவரது முகம் கோபத்திலேயே இருந்துள்ளார்.. இதனால், அவரை மறுபடியும் சமாதானப்படுத்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார் விஷால்.. அப்போது கல்பனா, இனி உன்னுடன் சேர்ந்து வாழ இஷ்டமில்லை, உடனே டைவர்ஸ் வேண்டும்" என்று கேட்டதுடன், விஷாலையும், அவரது அம்மாவையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்.. இதைக் கேட்டு அதிர்ந்த விஷால், சாதாரண விஷயத்தை ஏன் பெரிதுபடுத்துகிறாய் என்று கேட்டுள்ளார்..

கடித்து கடித்து புண்
உடனே கல்பனா, அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, தன்னுடைய பெற்றோரையும், அண்ணனையும் வீட்டுக்கு உடனடியாக வரவழைத்தார்.. இந்த சின்ன விஷயத்தை பெரிதுப்படுத்தி, அவர்களும் கேள்வி கேட்கவும் விஷாலுக்கு கோபம் அதிகமானது.. அப்போதுதான் வாக்குவாதமும் வெடித்துள்ளது.. இந்த வாக்குவாதம் முற்றி, ஒருகட்டத்தில், கல்பனா தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து விஷாலையும், அவரது அம்மாவையும் சரமாரியாக அடித்துவிட்டனர்.. அதுமட்டுமல்லாமல், அவர்களின் உடம்பெல்லாம் கடித்துவிட்டார் கல்பனா..

தலையே சுத்துது
இதில் படுகாயடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இதற்கு பிறகு, காட்கோபர் போலீசில் புகார் தந்தார் விஷால்.. அதன்பேரில், போலீசார் கல்பனா, அவரது அண்ணன், அவரது பெற்றோர் மீது பிரிவு 323, 324, 327, 504 மற்றும் 506ன்கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீசும் அனுப்பியுள்ளனர்... இந்த விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றம் போலீசார் காவல்துறை தெரிவித்துள்ளனர்... ஆனால், திருமண தேதியை மறந்தது ஒரு குற்றமா? கல்பனா எதற்காக உண்மையிலேயே டைவர்ஸ் கேட்டார்? என்று மண்டை காய்ந்து போயுள்ளாராம் விஷால்..!!!
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications