மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலாகியுள்ளது. இம்மாநிலத்தில் திடீரென ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தது ஏன் என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக, சிவசேனாவை தொடர்ந்து 54 இடங்களை வென்ற 3-வது கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அவர் அவகாசம் கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு ஆளுநரிடம் தேசியவாத காங்கிரஸ் கடிதம் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
அதில், ஆட்சி அமைப்பதற்கு மேலும் 2 நாட்கள் அதாவது 48 மணிநேர அவகாசம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் இன்னமும் ஆதரவு கடிதத்தை தரவில்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் 2 நாட்கள் அவகாச கோரிக்கையை ஆளுநர் கோஷ்யாரி நிராகரித்தார். அத்துடன் இன்று இரவு 8.30 மணிவரை தேசியவாத காங்கிரஸுக்கு கொடுத்த கால அவகாசத்தையும் ஆளுநர் கோஷ்யாரி ரத்து செய்தார்.
இதன்பின்னர்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இயலாத நிலை இருக்கிறது; ஆகையால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு ஆளுநர் கோஷ்யாரி பரிந்துரைத்தார். உடனடியாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இதை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது. தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் கிடைத்ததால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications