8 கல்யாணம் பண்ணியும் திருந்தல.. 9-வதாக பணக்காரருக்கு குறிவைத்த கல்யாண ராணி! கடைசியில் கையில் காப்பு
மும்பை: ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர் ஒருவர் செய்த செயல் முகம் சுளிக்க செய்துள்ளது. ஒருவர், இருவரை அல்ல மொத்தம் 8 பேரை திருமணம் செய்துவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளார். ஒரே ஒருவரிடம் மட்டும் ரூ.50 லட்சம் பறித்துள்ளார். 9-வதாக ஒருவரை ஏமாற்ற நினைத்தபோது போலீசிடம் சிக்கியுள்ளார் இந்த கல்யாண ராணி. இவர் இதுவரை 8 பேரை மட்டும் தான் அவர் ஏமாற்றினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சமீரா பாத்திமா. ஆசிரியையான இவருக்கு கடந்த 2010 ஆண்டு திருமணம் ஆனது. நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவர் தன்னை அழகாக இருக்கிறோம் என்று மனதில் நினைத்து பலமுறை அதனை கணவனிடன் சொல்லி காண்பிப்பாராம்.

கல்யாண ராணி சமீரா பாத்திமா
இதனாலேயே அவருக்கு சொகுசாக வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால் கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தார். அதன்படி கணவரை விவாகரத்து செய்த அவர் 2வது திருமணம் செய்வதற்காக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார். இதனை தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம், தான் முதல் திருமண வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்ததாக கூறி அனுதாபம் பெற்றுள்ளார்.
இவர் பேசும் பேச்சில் மயங்கி சிலர் திருமணத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவர் அதில் யார் பணக்காரராக, வசதியாக இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்துள்ளார். பின்னர் மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார் சமீரா பாத்திமா. அதாவது, தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுவாராம்.
ஒரே ஒருவரிடம் மட்டும் ரூ. 50 லட்சம்
அதோடு போலீசில் சென்று புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் எனில் பணம் தர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதில் பயந்துபோகும் நபர்களிம் முடிந்தவரை பணத்தை கறந்துவிட்டு தப்பித்து வந்துள்ளார். இப்படி இவர் மோசடி வலைகளில் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரையும் வீழ்த்தியுள்ளார். இவரது டார்கெட் முழுக்க முழுக்க திருமணம் ஆகாத நபர்கள் தான். அதிலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பணக்காரர்களை மட்டுமே தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.
இப்படியாகவே கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் தனது கைவரிசைய 8 நபர்களிடம் காட்டி பணத்தை மோசடி செய்துள்ளார். இதில் ஒரே ஒருவரிடம் மட்டும் ரூ. 50 லட்சம் கறந்துள்ளார். இன்னொருவரிடம் ரூ.15 லட்சம் பெற்று இருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் தான் சமீரா பாத்திமா பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
9-வதாக பணக்காரருக்கு குறி
நாக்பூரில் பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது சமீரா என்ற பெண் என தெரியவந்தது. இதன்பேரில் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சமீரா பாத்திமாவை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் சமீரா தலைமறைவானார். நீண்ட நாட்களாக வெளியில் வரவில்லை.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு இணங்க, 9-வது முறையாக ஒரு பணக்காரரை வீழ்த்த திட்டமிட்டபோது போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். 8 பேரை ஏமாற்றியிருக்கும் அவர் அதோடு நிற்காமல், மேலும் ஒருவரை இதேபோன்று தனது ஆசை வலையில் வீழ்த்தி இளைஞர் ஒருவரை தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க வைத்துள்ளார். அப்போது அந்த இளைஞரை நாக்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வரவழைத்து இருக்கிறார்.
8 பேரை மட்டும் தான் ஏமாற்றினாரா?
இதனை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார், அந்த கடைக்கு சென்று சமீரா பாத்திமாவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அந்த இளைஞரிடம் இவர் யார் என்பது பற்றி தெரிவித்து அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை கூறினார். இதையடுத்து கைது செய்த கல்யாண ராணி சமீராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 8 பேரை மட்டும் தான் அவர் ஏமாற்றினாரா? இல்லை இன்னும் பலரை ஏமாற்றி இருக்கிறாரா என்பது விசாரணையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications