50 ஆயிரம் ரூபாயாம்.. மனைவி மாதவிடாய் ரத்தத்தை.. அப்படியே அள்ளிப்போன கணவர், மாமியார்! அகோரி அட்டகாசம்
மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை அவருடைய கணவரும் மாமியாரும் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி
மும்பை: மகாராஷ்டிராவில் அகோரி பூஜைக்காக மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை அவருடைய கணவரும் மாமியாரும் விற்ற சம்பவத்தை அடுத்து இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடுமைகளை தாங்க முடியாத அந்த பெண் தனது பெற்றோரிடம் கண் கலங்கியபடியே சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மாப்பிளளை வீட்டார் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை
அப்போது அந்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அவர் பல்வேறு திடுக் சம்பவங்களை தெரிவித்தார். அதில் அவர் கூறுகையில் எனக்கு குழந்தை இல்லாததால் மாதவிடாய் காலத்தின் போது எனது கை, கால்களை கட்டி போட்டு மாதவிடாய் ரத்தத்தை கணவர், மாமியார் சேகரித்தனர். அவ்வாறு சேகரித்த ரத்தத்தை அகோரி பூஜை மற்றும் மாந்த்ரீக பூஜைக்காக பயன்படுத்துவார்கள்.

வழக்கம்
இதை பல மாதங்களாக வழக்கமாக செய்து வந்தார்கள். இதற்கு கணவர், மாமியார் மட்டுமல்லாமல் எனது மாமனார், மைத்துனர் ஆகியோரும் உடந்தையாக இருந்து வந்தனர். என்னுடைய மாதவிடாய் ரத்தத்தை மந்திரவாதியிடம் ரூ 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர் என அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் கணவர்
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்திற்கும் புகாராக சென்றுள்ளது. இது குறித்து ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அகோரி பூஜைக்காக பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து ரூ 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

மனித குலம்
இது பெண் குலத்தையும் மனித குலத்தையும் அவமானப்படுத்தும் செயலாகும். இந்த சம்பவங்களில் இருந்து பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஒரு பாட்டில் ரத்தம்
அந்த பெண்ணுக்கு குழந்தை இல்லை. ஒரு பாட்டில் மாதவிடாய் ரத்தத்தைதான் இவர்கள் ரூ 50 ஆயிரத்திற்கு விற்றுள்ளனராம். இந்த சம்பவம் 2022 இல் நடந்தது. அது போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இறந்த நபரின் எலும்பு தூளை சாப்பிடுமாறு அந்த பெண்ணின் மாமனார், மாமியார் வற்புறுத்தினராம்.












Click it and Unblock the Notifications