இன்ஸ்டாவில் விதவித போட்டோ.. மயங்கும் இளைஞர்கள் தான் டார்கெட்.. பல லட்சங்களை சுருட்டிய கோவை டீச்சர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரிடம், ஆசை ஆசையாயக பேசி பல லட்சங்களை ஏமாற்றி மோசடி செய்த பெண் ஒருவர் போலீசிடம் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் வசதியான இளைஞர்களை குறிவைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணத்தை கறந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவை போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பிறகு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெருகிவிட்டது.

வயது வித்தியாசம் பாராமல் அனைத்து தரப்பினரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

 சமூக வலைத்தள மோசடி

சமூக வலைத்தள மோசடி

சமூக வலைத்தளங்களை அளவோடு பயன்படுத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனால், எப்போதும் அதையே பயன்படுத்திக் கொண்டு இருந்தால் நேர விரயம் ஆவதோடு உளவியல் ரீதியாக பாதிப்புகள் கூட ஏற்படலாம் என நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க பல மோசடிகளும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. முன் பின் தெரியாத நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அதன் மூலம் சில மோசடி நபர்கள் தங்கள் வேலையை எளிதாக சமூக வலைத்தளம் மூலமாக காட்டி விடுகிறார்கள்.

கோவையை சேர்ந்த பெண் அறிமுகம்

கோவையை சேர்ந்த பெண் அறிமுகம்

அப்படித்தான் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆசிரியை பல இளைஞர்களை மோசடி செய்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: - மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள செம்பூரை சேர்ந்தவர் ராஜேஷ். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ராஜெஷ் தனது ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்தார். அப்போது அவருக்கு இன்ஸ்டாகிரம் மூலம் லோரன் என்ற பெண் அறிமுகம் ஆனார். இவர் மூலமாக கோவையை சேர்ந்த ஹசல் ஜேம்சின் என்ற பெண் அறிமுகம் ராஜேசுக்கு கிடைத்தது.

செல்போன் எண் பரிமாறிக்கொண்டு

செல்போன் எண் பரிமாறிக்கொண்டு

அழகான தோற்றம் கொண்ட ஹசல் ஜேம்சின் தனது இன்ஸ்டாவில் வித விதமான புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார். இதனைப் பார்த்த ரஜேஷ் தவறாமல் லைக் போட்டு வந்துள்ளார். நாளைடைவில் ஹசல் ஜேம்சினுக்கும் ராஜேஷுக்கும் சமூக வலைத்தளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகினர். தொடர்ந்து இருவரும் பேசி தங்கள் சொந்தக்கதைகள் முதல் உலக கதைகள் வரை பேசி வந்துள்ளனர்.

திருமணம் ஆகிவிட்டதாக

திருமணம் ஆகிவிட்டதாக

அப்போது, ஹசல் ஜேம்சின் தனக்கு திருமணம் ஆகவில்லை இன்னும் சிங்கிள் ஆகத்தான் இருப்பதாகவும் ராஜேசிடம் கூறியிருக்கிறார். இதனால், ரஜேசும் அவர் மீது காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென ஒருநாள் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனாலும் காதல் மயக்கத்தில் இருந்த ராஜேஷின் காதில் எதுவும் விழவில்லை.

ரூ.90 ஆயிரம் கொடுத்துள்ளார்

ரூ.90 ஆயிரம் கொடுத்துள்ளார்

ஜேம்சின் பேச்சில் மயங்கி அவர் கேட்பதற்கு அனைத்தும் தலையாட்ட தொடங்கியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஹசல் ஜேம்சின் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜேஷ் முதலில் ரூபாய் 90 ஆயிரம் கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து சொந்தமாக தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு பணம் தாருங்கள் என்று ஹசல் ஜேம்சின், ராஜேஷிடம் கேட்டுள்ளார்.

ராஜேசுடன் பேசுவதை நிறுத்தினார்

ராஜேசுடன் பேசுவதை நிறுத்தினார்

ராஜேசும் சற்றும் யோசிக்காமல் 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மேலும் ஹசல் ஜேம்சினுக்கு அழகு சாதன பொருட்கள், கார் ஆகியவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். இதற்கிடையே, ஹசல் ஜேம்சை தொடர்பு கொண்ட ராஜேஷ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டுள்ளார். ஆனால், ஹசல் ஜேம்ஸ் தொடர்ந்து தட்டிக் கழித்து வந்துள்ளார். நாட்கள் போக போக ஹசல் ஜேம்ஸின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜேசுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

பல திடுக்கிடும் உண்மைகள்

பல திடுக்கிடும் உண்மைகள்

அதன்பிறகுதான் ராஜேசிற்கு பொறி தட்டியது. ஹசல் ஜேம்சினை கண்காணிக்க தொடங்கிய ராஜேசுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. ஹசல் ஜேம்ஸ் பல ஆண்களிடம் இப்படி பேசி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் கறந்து வருவது தெரியவந்தது. மேலும் தற்போது ராணுவ வீரர் ஒருவருடன் ஹசல் ஜேம்சின் தொடர்பில் இருந்து வருவதையும் ராஜேஷ் கண்டுபிடித்தார். இது குறித்து ஹசல் ஜேம்சிடம் ராஜேஷ் கேட்டுள்ளார்.

உன்னைக் கொல்ல ஆள் இருக்கிறது

உன்னைக் கொல்ல ஆள் இருக்கிறது

அதற்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை அதில் தலையிடக் கூடாது என்று ஹசல் ஜேம்சின் கூறியிருக்கிறார். இதனால் வெறுத்து போன ராஜேஷ், நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்று கேட்டுள்ளார். ஆனால், ஹசல் ஜேம்சின் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியிருக்கிறார். பின்னர் ராஜேஷ் மீண்டும் பணத்தை கேட்ட போது, 2 லட்ச ரூபாய் கொடுத்தால் போது உன்னைக் கொல்ல ஆள் இருக்கிறது.. எனவே 20 லட்சம் ரூபாயை கொடுப்பதற்கு அதை செய்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

கோவை போலீசில் புகார்

கோவை போலீசில் புகார்

இதனால் பயந்து போன ராஜேஷ் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், போத்தனூர் போலீசார் ஹசல் ஜேம்சின் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஹசல் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை என்பது தெரியவந்தது. ஹசல் ஜேம்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்

ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்

இதில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் ஹசல் ஜேம்ஸ், கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். ஆனால் அவரது நடவடிக்கை சரியில்லாததால் அவரை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதன்பிறகு அவர் இன்ஸ்டாகிரமில் புகைப்படங்களை பகிர்ந்து வசதியான இளைஞர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களிடம் பணத்தை பறித்து வந்துள்ளார். கோவையை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் பழகி வரும் ஹசல் ஜேம்ஸ் அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தாரம். ஆனால் மும்பை இளைஞர் ராஜேஸ் அளித்த புகாரால் அவர் சிக்கிக் கொண்டார். தற்போது ஹசல் ஜேம்சை கைது செய்யும் நடவடிக்கையில் போத்தனூர் போலீசார் ஈடுபட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+