கொரோனாவுக்கு உலக அளவில் 50,18,57,704 பேர் பாதிப்பு - 45 கோடி பேர் மீண்டனர்
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 50,18,57,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 45,19,65,568 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 62,13,476 பேர் உயிரிழந்துள்ளனர்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,18,57,704 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,19,65,568 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,13,476பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது கொரோனா இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெளி நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. எக்ஸ் இ வகை புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஒரே நாளில் 9,76,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 50,18,57,704 பேர் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 9,76,107 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 45,19,65,568 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 2,735 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 62,13,476 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
தற்போது புதிய வகை கொரோனா XE பரவத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் 1,46,426 பேர் புதிதாக ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 1,79,888 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் ஒரே நாளில் 1,95,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,21,767 பேராக அதிகரித்துள்ளது. 190 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஓமிக்ரான் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications