அதிருப்தி எம்எல்ஏக்களை அலற விடும் காங்கிரஸ் தொண்டர்கள்.. ஹோட்டலுக்கு வெளியே போராட்டம்
மும்பை: மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணா நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையிலுல்ள போவாய் என்ற ஹோட்டலில்தான் கர்நாடக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். சட்டசபையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், ஹோட்டலுக்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் கைகளில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏந்தியிருந்தனர். பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போராட்டக்காரர்களை அங்கேயிருந்து அகற்ற பெரும் சிரமப்பட்டனர்.
இந்த போராட்டத்திற்கு நடுவேயும், எந்த ஒரு அதிருப்தி எம்எல்ஏவும் வெளியே வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் மும்பை ஹோட்டலுக்கு, அதிருப்தியாளர்களை சந்திக்க சென்றபோதும், காவல்துறையினர் அவரை உள்ளே விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications