விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி! ரத்து செய்யப்பட்ட சர்தார் 2 ஷூட்டிங்.. திடீர் பரபரப்பு! என்னாச்சு?
மைசூர்: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்த கார்த்திக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. காலில் ஏற்பட்ட திடீர் காயத்தால் அவரது சர்தார் 2 ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்திக்கு என்ன நடந்தது.. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது.. அவரது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் ஒரு சில நடிகர்களில் கார்த்தி முக்கியமானவர். பருத்திவீரன் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், கைதி என இவர் நடித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகையில் தனித்து நிற்கும்.

சர்தார் 2
இவரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்த இந்த படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா எனப் பலரும் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். அப்பா- மகன் என கார்த்தி இரு வேடங்களில் நடித்திருந்த சூழலில், இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
உளவாளியான கார்த்தி ஒரு கட்டத்தில் தேசத்துரோகி என்று முத்திரையிடப்படுகிறார். இருப்பினும், அவர் தேச நலனுக்காக எந்தளவுக்கு முக்கியமான தியாகத்தைச் செய்தார் என்பதே இந்த படத்தின் கதையாகும். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அப்போதே இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடிகர் கார்த்திக்கு காயம்
மக்களிடையே சர்தார் 2 படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஷூட்டிங்கும் கூட பரபரப்பாக நடந்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்தது. அதன்படி தற்போது மைசூரில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
காலில் வீக்கம் இருந்த நிலையில், கார்த்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்து என்ன
இந்தாண்டு இறுதிக்குள் சர்தார் 2 படத்தைத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படத்தைத் திரைக்குக் கொண்டு வர முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், சிறு காயம் என்பதால் சில நாள் ஓய்வுக்குப் பிறகு படப்பிடிப்பு வழக்கம் போலத் தொடரும் என்றே கூறப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்து அவர் நடிப்பில் வா வாத்தியார் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications