"கோட்டை".. அசைக்க முடியுமா? நிரூபிக்கும் சித்தராமையா.. வருணா தொகுதியில் தொடர்ந்து முன்னிலை!
மைசூர் : முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, வருணா தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சித்தராமையா தற்போது தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம்.

கர்நாடகா மாநிலத்தின் வருணா தொகுதி மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது. காரணம், இத்தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா களமிறங்கியுள்ளார்.
மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த முறை இந்த தொகுதியில் தனது மகன் யதீந்திராவை களமிறக்கினார் சித்தராமையா.
ஆனால் இந்த முறை சித்தராமையாவே களத்தில் இருக்கிறார். இம்முறை சித்தராமையாவை எதிர்கொள்ள பாஜக அமைச்சர் சோமன்னாவை களமிறக்கியுள்ளது. ஜேடிஎஸ் சார்பில் பாரதி சங்கர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் லிங்காயத் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.
கடந்த 2018 சட்டசபை தேர்தல் முடிவுகள்: 2018ல், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் யதீந்திரா சித்தராமையா 96,435 வாக்குகள் பெற்று வருணா தொகுதியில் வெற்றி பெற்றார். பாஜகவின் தோட்டப்பா பசவராஜ் 37,819 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications