அனிதாவுக்கு நீதி கேட்டு நெல்லையில் குழந்தைகளை சடலம்போல படுக்க வைத்து பெண்கள் போராட்டம்!
நெல்லை: அனிதா சாவுக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் நெல்லையில் ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர், சிறுமிகளையும் போலீசார் கைது செய்தனர். இநத் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தியது.
பாளையங்கோட்டையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்களால் நடத்தப்பட்டது. சாலையில் பிணம் போல குழந்தைககளை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

"நாங்கள் தமிழ் ஜாதியடா.. மக்களை பிரித்து வைத்த நீங்கள் ஆரியர்கள்" என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளும் கைது செய்யப்பட்டனர்.
வேறு ஒரு மாணவியும் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக சொந்த குழந்தைகளை இப்படி சாலையில் சடலம் போல படுக்க வைத்து போராட்டம் நடத்த முன்வந்ததாக அந்த பெண்கள் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

கைதான சிறுமி பேட்டியளிக்கையில், "அந்த அக்கா என்ன பாவம் செய்தார். நல்லா படிச்சு மார்க் எடுத்தது தப்பா. அவரது சாவுக்கு நியாயம் வேண்டும்." என்று தெரிவித்தது பரிதாபம் வரவழைப்பதாக இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications