மீண்டும் வாங்க தாத்தா.. கலங்கியபடி தேடும் குடும்பம்.. பார்த்தவர்கள் தகவல் சொல்லுங்களேன்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் காணாமல் போய் இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ளது. மே 11ம் தேதி காணாமல் போன அந்த முதியவரை அவரது குடும்பமே கலங்கியபடி தேடிவருகிறது.
துரைராஜ் என்ற 70 வயது முதியவரை காணவில்லை என்று வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி பகுதிகளில் ஏராளமான போஸ்டர்கள் அடிக்கப்படட நிலையில், அதுபற்றி என்ன என்று நாம் விசாரித்தோம்.

அப்போது துரைராஜ் அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ளது காமேஸ்வரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் வயது 70. இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் . ஐந்து அடி 10 அங்குலம் உள்ளவர், மெல்லிய உடல் தேகம் உடையவர். வேகமாக நடக்கக்கூடியவர். காணாமல் போன அன்று கைலியும் துண்டும் மட்டுமே அணிந்து இருந்தார். சட்டை அணியவில்லை.
மே 11ம் தேதி அன்று காணாமல் போன அன்று அவர்களது ஊரில் உள்ள கோயிலில் அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் வேளாங்கண்ணி பகுதியில் இருந்து துரைராஜ் மாயமானார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முதியவர் துரைராஜின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் துரைராஜின் தம்பி மகன் சுகுமார், தனது பெரியப்பாவை தேடி பல இடங்களில் அலைந்துள்ளார். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் கடந்த 13 நாட்களாக தேடி அலைந்துள்ளனர். ஒவ்வொரு பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளில் போஸ்டர்களை காட்டி தேடி உள்ளனர். சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள திருத்துறைப்பூண்டி வரை போய் தேடி இருக்கிறார்கள். அங்கும் அவர் இல்லை. வேளாங்கண்ணி சுற்றுவட்டாரம் முழுவதும் தேடப்பட்ட நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியாக அவரை திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் பகுதியில் பார்த்ததாக மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் அங்கு சிசிடிவி அப்போது வேலை செய்யததால் அவர், அங்கிருந்து எந்த பக்கம் சென்றார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காணாமல் போன முதியவர் துரைராஜ் பற்றி தகவல் தெரிந்தால், ராஜேந்திரன் 9489108915 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது சுகுமார் 9819861311 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம். காவல்துறையினர் முதியவரை கண்டுபிடிக்கும் விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications