ஸ்ரீரங்கத்தில் விளையக் கூடிய இமாம் பசந்த் ரக மாம்பழங்களை நாகூரில் விளைவித்து அசத்தல்.. நல்ல லாபம்
நாகை: திருச்சி ஸ்ரீரங்கத்தில் மட்டும் விளையக்கூடிய சுவை மிகுந்த இமாம் பசந்த் ரக மாம்பழத்தை நாகூரில் விளைவித்து இளைஞர் ஒருவர் நல்ல லாபம் பெற்று வருகிறார்.
Recommended Video
மாம்பழத்திற்கு சேலம் மாவட்டம் பிரசித்தி பெற்றது என்றாலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் விளையக்கூடிய இமாம் பசந்த் ரக மாம்பழத்திற்கு மாம்பழ பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பழங்களின் ராஜா மாம்பழம், அதிலும் ராஜா இமாம் பசந்த் என்பார்கள்.

விலை அதிகமாக இருந்தாலும், சுவைக்கு மற்ற எந்தவகை மாம்பழமும் ஈடுகொடுக்க முடியாததால், இமாம் பசந்த் மாம்பழத்திற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி காவிரி கரையில் மட்டுமே கிடைக்ககூடிய இமாம் பசந்த் ரக மாம்பழத்தை நாகை அடுத்த நாகூர் பகுதியில் தனது சொந்த தோட்டத்தில் விளைவித்து அசத்தியுள்ளார் மஸ்தான் என்பவர்.
நாகூர் பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்த மஸ்தான் தனக்கு சொந்த தோட்டத்தில் 4 இமாம் பசந்த் ரக மா மரங்களை வைத்து பராமரித்து வருகிறார். மா சீசன் முடியும் தருவாயில், அவரது தோட்டத்தில் இமாம் பசந்த் மாங்காய்கள் அதிகமாக விளைந்துள்ளதால், பரவை, காரைக்கால், திருபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார்.
இமாம் பசந்த் ரக மாம்பலம் கிலோ 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாவதாக கூறியுள்ள மஸ்தான், ஒட்டு, நீலம், நாட்டு மாங்கா உள்ளிட்ட 7 வகையான மாங்காய்கள் தனது தோட்டத்தில் விளைவிப்பதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications