ஈபி ஊழியர்களுக்கு இலவச கட்டிங், ஷேவிங்.. நாகை நாவிதர்களின் சபாஷ் சேவை
மின் வாரிய ஊழியர்களுக்கு 2 பேர் இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகின்றனர்
நாகை: தங்கள் கடைக்கு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்ய முன் வந்திருக்கிறார்கள் 2 பேர்.
கஜா புயல் பாதிக்கப்பட்டதில் மிக முக்கியமான மாவட்டம் நாகை. இந்த மாவட்டத்தில் இருந்த அத்தனை மரங்களும், கரண்ட் கம்பங்களும் முறிந்து சாய்ந்து விழுந்து கிடந்தன.

இதனால் மின்வாரிய ஊழியர்களின் பணி அளப்பரியது. அதனால்தான் அமைச்சர்கள் முதல், கமல் உள்ளிட்ட பல தலைவர்கள் மின்வாரிய ஊழியர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
சாப்பிட கூட நேரம் இல்லாமல், இவர்கள் கரண்ட் கம்பத்தில் உட்கார்ந்து கொண்டும், தொங்கி கொண்டும் சாப்பிட்ட போட்டோக்கள் கூட இணையத்தில் வைரலாகியதை நாமும் கண்டோம்.
இப்போது வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்களுக்கு 2 பேர் உதவ முன்வந்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் தேவதாஸ் மற்றும் ஏவி அருள் என்பது. இவர்கள் முடி திருத்தும் தொழிலாளர்கள். தங்கள் கடைக்கு வரும் மின்வாரிய ஊழியர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்ய முன் வந்திருக்கிறார்கள்.
இதற்காக தங்கள் கடையில் ஒரு நோட்டீஸ் போர்டையும் வைத்திருக்கிறார்கள். குடும்பம், குட்டிகளை விட்டுவிட்டு, எங்களுக்காக இங்கேயே தங்கி வேலை பார்த்தார்கள் மின்ஊழியர்கள். அவர்களின் உதவியை நாங்கள் எப்பவுமே மறக்க மாட்டோம்.
அவங்களுக்காக ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சுதான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்த முடிவு எடுத்து அவர்களுக்கு இலவசமாக கட்டிங், ஷேவிங் செய்து வருகிறோம். இதை பார்த்த அவர்களும் எங்களுக்கு மனசார நன்றி சொல்லிவிட்டு போகிறார்கள்.












Click it and Unblock the Notifications