நாகப்பட்டினம் கடலில் மிதந்த தங்கமீன்கள்.. மலைத்து போய் பரவசமான நாகை மீனவர்கள்.. சூப்பர்ல
நாகை: நாகை கடலில் நடந்த சம்பவம் ஒன்று, மாவட்ட மக்களை சிலிர்ப்பில் ஆழ்த்தி வருகிறது. இது தொடர்பாக தங்கமீன்கள் விடும் விழாவானது, இணையத்தில் வீடியோவாக வெளிவந்து, பக்தர்களுக்கு பரவசத்தை தந்து கொண்டிருக்கிறது.
வறுமையில் வாடிய போதும் ரத்தின கற்கள் பதித்த தங்க மீன் வலையில் கிடைத்தும் அதை இறைவனுக்கு அர்ப்பணித்த சிவ தொண்டர்களும் இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் என்ற சிவ தொண்டருக்காக, இறைவன் முக்தியளித்த விழா வருடந்தோறும் நாகப்பட்டினத்தில் நடைபெறுவது வழக்கமாகும். இதற்கு பின்னணில் ஒரு சம்பவமும் சொல்லப்படுகிறது.
அதாவது, சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலத்தில், நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் என்ற இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்கள்.
சிறந்த பக்தர்: இவர்களுக்கு அதிபக்தர் என்பவர் தலைவராக இருந்தார். இந்த அதிபக்தர், சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தவர்.. அதனால், தனக்கு கிடைக்கும் மீன்களில், சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்தால்கூட, அதையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவாராம். ஒரு நாளுக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், அத்தனையையும் தினமும் இறைவனுக்கே அர்ப்பணித்துவிட்டு, பசியோடு இருந்துவிடுவாராம்.
இவரை பார்த்ததுமே மற்ற சிவபக்தர்களும், தங்களுக்கு ஒரு மீன் கிடைத்தாலும் அதனை சிவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு பசியால் வாடினர்.. ஒருநாள் அதிபக்தரை சோதிக்க நினைத்த சிவபெருமான், மீனுக்கு பதிலாக தங்க மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்துவிட்டார்.. அந்த மீன் பார்ப்பதற்கே கண்ணை பறித்தது.
தங்க மீன்கள்: மீனவர்கள் எல்லாருமே ஆச்சரியத்துடன் தங்க மீனை பார்த்தார்கள். ஆனால், அந்த ஒரு மீன்தவிர வேறு எதுவுமே அதிபக்தருக்கு அன்றைய தினம் கிடைக்கவில்லை. எனினும், கிடைத்த ஒரு தங்க மீனையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்தார் அதிபக்தர். இதைக்கண்டு மெய்சிலிர்த்த சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்து அதிபக்தருக்கு அருள்பாலித்தாராம்.
இந்த புராண நிகழ்வை சிறப்பிக்கும்வகையில்தான், நாகை கடலில் தங்கமீன் விடும் திருவிழா வருடா வருடம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாள் என்பதால் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று அழைக்கப்படுகிறது.
கோலாகலம்: இந்த வருடமும் தங்கமீன் விடும் திருவிழா வெகுசிறப்பாக நேற்று நடைபெற்றது.. நீலாயதாட்சி அம்மன் கோயிலில், இடப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளினார்..
பின்னர், நம்பியார் நகர் கிராம மீனவர்கள் மேளதாளம், மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் சிவபெருமானையும், அதிபத்த நாயனாரையும் நாகை புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.. புதிய கடற்கரையில் நம்பியார் நகர், ஆரியாநட்டு தெரு, சாமந்தான் பேட்டை கிராம மீனவர்கள் சீர்வரிசையுடன் வரவேற்றனர்.. புதிய கடற்கரைக்கு இடப வாகனத்தில் வந்த சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு தரிசனம்: இதற்கு பிறகு, நாகப்பட்டினம், நம்பியார் நகரில் தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற அதிபக்தநாயனாரை பக்தர்கள் சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு எடுத்தார்கள்..
அதிபத்த நாயனாரின் சிலையுடன், 2 தங்க மீன்கள் மற்றும் ஒரு வெள்ளி மீன் படகில் கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிபத்த நாயனார், வெள்ளி, மற்றும் தங்க மீன்களை சிவனுக்கு அர்ப்பணித்து கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தங்கமீன் விடும் திருவிழாவில், சிவனடியார்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு அதிபக்த நாயனாரை வேண்டிக்கொண்டு சுவாமி தரினம் செய்தனர்.












Click it and Unblock the Notifications