மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை
நாகை: நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
நாகை மாவட்டத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் விவசாய நிலங்களை உழுது பயிர் செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு உழவுப்பணிகளை துவக்க உள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து இருந்தது. அன்று 8.30 முதல் 10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
-
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications