10 ஆண்டு காதலுக்குபின் சிரமப்பட்டு திருமண ஏற்பாடு.. திடீரென இறந்த காதலன்! பெண் எடுத்த ஆச்சரிய முடிவு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே 10 ஆண்டு காதல் கைக்கூடிய நிலையில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மின்வாரியத்தில் பணியாற்றிய காதலன் மின்விபத்தில் இறந்ததால் திருமணம் தடைப்பட்டது. இந்நிலையில் காதலன் நினைவாக அவரது பெற்றோருடன் அந்த பெண் வசித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிராபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி பத்மாவதி. இந்த தம்பதியின் மகன் சபரிகிருஷ்ணன் (வயது 26). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. இவரது கணவர் மோகன். இந்த தம்பதியின் மகள் ரேவதி. இவரும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

 திருமண ஏற்பாடு

திருமண ஏற்பாடு

இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் 2021 ஜூலை 20ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அழைப்பிதழ் கொடுத்து திருமண ஏற்பாடுகளை இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 10 ஆண்டு காதல் கைக்கூடிய மகிழ்ச்சியில் சபரிகிருஷ்ணன்-ரேவதி ஜோடி இருந்தது.

எதிர்பாராத இறப்பு

எதிர்பாராத இறப்பு

திருமணத்துக்கு சில நாட்களே இருந்த நிலையில் 2021 ஜூலை 7ம் தேதி வேளாங்கண்ணியில் மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு இருகுடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக அதீத மன உளைச்சலுக்கு ரேவதி ஆளானார்.

காதலனின் பெற்றோருடன்...

காதலனின் பெற்றோருடன்...

உயிருக்கு உயிராக காதலித்த காதலனே கணவனாக மாற வேண்டிய நிலையில் அவரது எதிர்பாராத மரணத்தை ரேவதியால் மறக்க முடியவில்லை. இதனால் மகனை இழந்து வாடும் தனது கோவிந்தராஜ்-பத்மாவதியை நினைத்து பார்த்தார். மேலும் தனது காதலன் நினைவாக அவர்களோடு இருக்க ரேவதி முடிவு செய்தார். தற்போது ரேவதி தனது வீட்டை விட்டு வெளியேறி சபரி கிருஷ்ணனின் தாய்-தந்தையோடு வசித்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்து வருகிறார். தனது மகளின் காதலியான ரேவதி தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவாக அவரை பார்த்து வருவதாக கண்ணீருடன் சபரிகிரஷ்ணனின் தாய் பத்மாவதி கூறி வருகிறார். இதுபற்றி பத்மாவதி கூறியதாவது:

தாய், சகோதரர் வருத்தம்

தாய், சகோதரர் வருத்தம்

எனது கணவர் கோவிந்தராஜ் வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்க்கிறார். சபரி கிருஷ்ணனின் சகோதரர் கூலி வேலை செய்கிறார். ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரி கிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தோம். அவனது இழப்பால் நாங்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்'' என வருந்தினார். சபரி கிருஷ்ணனின் சகோதரர் கூறுகையில், ‛‛எனது சகோதரர் இறப்பிற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறிய மின்வாரிய அலுவலர்கள் 8 மாதங்களாகியும் கண்டுகொள்ளவில்லை. எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+