வாசலில் கிடந்த தாலி.. அதிர்ந்த கணவன்.. அழுதுகொண்டே தூக்கில் தொங்கிய துயரம்.. காதல் படுத்திய பாடு
காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ளார் இளைஞர்
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் அரவிந்த் குமார்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த சிவ நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்..
சிவந்தினிக்கு 22 வயதாகிறது.. இது இவர்களின் 3 வருட காதல்..! ஒருகட்டத்தில் இந்த காதல் விவகாரம் நந்தினி வீட்டில் தெரிந்துவிட்டது.. அதனால் எதிர்ப்பும் எழுந்தது.

மகளை காணவில்லை
தங்கள் பெற்றோரை சமாதானப்படுத்த முடியாது என்று தெரிந்த காதலர்கள் இருவரும் வெளியூருக்குச் சென்று கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகளை காணவில்லை என்று நந்தினியின் வீட்டில் கடந்த 11ம் தேதி வேளாங்கண்ணி ஸ்டேஷனில் புகார் தந்துள்ளனர்.. இது தொடர்பாக போலீசாரும் விசாரணையில் இறங்கியபோது, புது மண தம்பதி இருவருமே கடந்த 19ம் தேதி வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளனர்..

போலீஸ் ஸ்டேஷன்
இருவரிடமும் ஸ்டேஷனிலேயே பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.. இந்த விஷயம் தெரிந்து, பெண் வீட்டை சேர்ந்த அத்தனை பேரும் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டனர்.. நந்தினியின் அப்பா ராஜேந்திரன், அண்ணன் தம்பிகள், உறவினர் எல்லாரும் சேர்ந்து அவரை மிரட்டி, தாலியை கழற்றி போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே வீசியதாக கூறப்படுகிறது.. அத்துடன் சிவநந்தினியையும் மிரட்டி வீட்டிற்கு கையோடு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

அதிர்ச்சி
கிளம்பி செல்லும்போது, அரவிந்த் குமாரை அவமானப்படுத்தி பேசி கொலைமிரட்டலும் விடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அரவிந்த்குமார், தன் வீட்டிற்கு வந்து அழுது கொண்டே இருந்தார்.. யாரிடமும் பேசவில்லை.. காதல் மனைவியை அவர்கள் வீட்டில் கையோடு அழைத்து சென்ற அதிர்ச்சியில் இருந்தும் மீளவில்லை.. இறுதியில் அழுது கொண்டே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விசாரணை
அரவிந்த் குமாரின் சடலத்தை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.. அம்மா விஜயலக்ஷ்மி, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் தந்ததன் பேரில், அரவிந்த்குமார் சடலத்தை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இதனிடையே நந்தினி கழுத்தில் கட்டப்பட்ட தாலி, வேளாங்கண்ணி போலீஸ் ஸ்டேஷனில் வீசியெறிந்த தாலி, கோயிலில் தம்பதி இருவரும் எடுத்து கொண்ட போட்டோக்கள போன்றவை சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications