நாகை கடற்கரையில் தோன்றிய உருவம்.. கோடியக்கரையில் ஒரே குஷி.. வியந்த வேதாரண்யம்.. "வானில்" பறக்க போகுது
நாகை: வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துகொண்டிருந்தபோது, வலையில் சிக்கிய உயிரினத்தை கண்டு திகைத்து போய்விட்டார்கள்.. இந்த சம்பவம்தான் தற்போது ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
கடல் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் நண்டு நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. கலோரிகள் இதில் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு ஒரு பெஸ்ட் சாய்ஸாக உள்ளது.

நண்டுகள்: அந்தவகையில் கல் நண்டுகளும் யாராலும் தவிர்க்க முடியாதவை.. இந்த கல் நண்டுகளை, சதுப்பு நில நண்டுகள் என்றும் சொல்வாரகள். உலகளாவிய அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவை இந்த கல் நண்டுகள்.. மாங்குரோவ் காடுகள் இருக்கும் சதுப்பு நிலங்களில் மட்டுமே இந்த நண்டுகள் காணப்படும்.. ஏனென்றால், இந்த நண்டுக்குரிய இயற்கை பாதுகாப்பினை மாங்குரோவ் காடுகள்தான் வழங்குகின்றன.
கல் நண்டுகளில், மற்ற இறைச்சிகளைவிட 2 சதவீதம் அதிக புரதச்சத்து உள்ளது.. அதேபோல, கேரட்களில் உள்ள கரோபினாய் சத்துக்கள் இந்த கல் நண்டுகளில் கூடுதலாக உள்ளது.. தாதுக்கள், இரும்புச்சத்து உள்ளிட்டவைகளும், பிற உணவுகளை காட்டிலும் கல் நண்டில் அதிகமாக நிறைந்திருக்கின்றன. வைட்டமின்கள் A, C, E, D1, D12 போன்றவை கல் நண்டில் உள்ளதால், ஆரோக்கியமான உணவாக கருததப்படுகிறது.
விருப்பமான உணவு: எனவேதான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவு இந்த கல் நண்டுகள் ஏற்றுமதியாகின்றன. கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால், அமெரிக்கர்கள் இதனை சூப் வைத்து சாப்பிடுவார்களாம்.
தாய்லாந்து நாட்டில், இந்த நண்டின் முட்டைகளை வைத்து தனியாக சமைத்து சாப்பிடுவார்களாம். அதாவது இந்த கல் நண்டு முட்டைகளை மட்டும் தனியாக எடுத்து வினிகரில் சேர்த்து காலை உணவாக எடுத்து கொள்கிறார்கள். இது சரும பளபளப்புக்கு மிகவும் உதவுகிறதாம். இல்லற இன்பத்தை அதிகரிக்கக்கூடிய சக்தி கல் நண்டுகளுக்கு உண்டு என்பதால், பெரும்பாலான நாடுகளில் இதற்கு வரவேற்பு உண்டு.
ஏற்றுமதி: மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தலை, சதைப்பகுதி, கால்கள் போன்றவை தனித்தனியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால்தான் எப்போது கல் நண்டுகள் கடலில் கிடைத்தாலும், நம் மீனவர்கள் குஷியாகிவிடுவார்கள். இப்போதும் ஒரு கல் நண்டு சிக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியிருக்கிறது.. வலையில் கல் நண்டினை பார்த்ததுமே, மீனவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது..
கல்நண்டுகள்: அந்த கல்நண்டுடன் கரைக்கு வந்தார்கள்.. உடனடியாக அந்த நண்டை அவர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர்.. நண்டின் பின்பகுதியில் மட்டுமே சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பதை பார்த்து திக்குமுக்காடிப் போய்விட்டனர். பொதுவாக நண்டுகளை பொறுத்தவரை, ஒரே நேரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடுமாம். ஆனால், இதில் 8 லட்சம் முட்டைகள் இருக்கின்றன.
அதனால், மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி, அதில் வென்டிலேட்டரையும் பொருத்தி உயிருடன் விட்டனர். இப்போது இந்த கல் நண்டினை குஞ்சு பொரிப்பதற்காக அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது...
வியப்பு: அங்கு குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து, ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொரித்தவுடன் நண்டு குஞ்சுகள் அனைத்துமே பத்திரமாக கடலில் மறுபடியும் விடப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.. குஞ்சு பொரிப்பதற்காகவே கல்நண்டு ஒன்று அந்தமானுக்கு ஃபிளைட்டில் பறக்க இருப்பது மீனவர்கள் உட்பட அனைவருக்குமே வியப்பை தந்து வருகிறது.
வெண்டிலேட்டர்: கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் நடைபெற்று வருகிறது. எனவே, இங்கு நாள்தோறும் மீன், நண்டு, இறால் வகைகள் அதிகளவில் கிடைத்து வருவது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது..
தற்போது மீனவர் வலையில் பிடிபட்டுள்ள இந்த கல் நண்டு, கிட்டத்தட்ட 3 கிலோ எடை கொண்டதாக இருக்கிறதாம். இப்போதைக்கு கல்நண்டு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பெட்டியில், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அந்தமானில் குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக ஒரு வாரம் வைத்திருப்பார்களாம். அதற்கு பிறகே குஞ்சுகள் பொரித்தவுடன் குஞ்சுகளை பத்திரமாக கடலில் கொண்டு போய் விடுவார்கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications