குழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளிடையே ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துள்ளது. தனது மாப்பிள்ளையையே இரும்புக்கம்மியால் அடித்துக்கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டிணம்: தன்னை விட படிப்பிலும் அறிவிலும் அதிகமாக உள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர் சந்தேக புத்தியால் வாழ்க்கையை இழந்ததோடு உயிரையும் இழந்துள்ளார். சொந்த மாமனாரே அவரை அடித்து கொலை செய்துள்ளார். தகுதிக்கு மீறிய காதல் கடைசியில் தகராறில்தான் முடியும் என்பது அந்த இளைஞரின் விசயத்தில் உண்மையாகியுள்ளது.
மாமனாரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர் பெயர் சதீஷ்குமார் என்பதாகும். இவர் தலைச்சங்காட்டை சேர்ந்த ராஜாராமன் என்பவரின் மகனாவார் எஸ்எஸ்எல்சி வரை மட்டுமே படித்த சதீஷ்குமார் அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை காதலித்தார். கலைமதி எம்எஸ்சி எம்பில் பட்டதாரி. தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

தனது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்றாலும் காதலுக்கு மதிப்பு கொடுத்து சதீஷ்குமாரை கரம் பிடித்தார் கலைமதி. சிலமாதங்கள் கூட மணவாழ்க்கை நீடிக்கவில்லை கசந்து போனது. காரணம் சதீஷ்குமாரின் சந்தேகபுத்தி. கலைமதியை வேலைக்கு போகவேண்டாம் என்று சண்டை போட்ட சதீஷ், ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினாராம்.
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டார் கலைமதி. அதற்கு முட்டுக்கட்டை போட்டார் சதீஷ். சண்டை முற்றிப்போகவே பெற்றோர் வீட்டுக்கு கிளம்பினார் கலைமதி. மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார். பிரிந்து வாழ்ந்த இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்தும் எதுவும் நடக்கவில்லை. இரு தினங்களுக்கு முன் தனது தாய்மாமனை பார்ப்பதற்காக கலைமதியின் ஊரான அப்பராசப்புதூர் வந்த சதீஷ்குமார் வழியில் தனது மாமனார் நாகராஜை சந்தித்து பேசினார்.

தனது மனைவியை தன்னோடு அனுப்பிவைக்கும்படி தகராறு செய்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தனது கையிலிருந்த கத்தியை கொண்டு சதீஷை குத்தியதோடு, அருகில் கிடந்த இரும்பு கம்பியை கொண்டு தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார். சதீஷ் குடும்பத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் நாகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications