உச்சி வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்த மின் ஊழியர்கள்.. கை குலுக்கி பாராட்டிய கமல்
மின் ஊழியர்களுக்கு கமல் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
Recommended Video

நாகை: உச்சி வெயில் மண்டை பிளக்க நின்றுகொண்டிருந்த இபி ஊழியர்கள் கமலின் இந்த ஜில் பாராட்டை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்!!
கமல் இன்று இரண்டாம் கட்டமாக புயல்பாதித்த பகுதிகளை பார்வையிட துவங்கி உள்ளார். அதன்படி அன்று காலையிலேயே நாகை மாவட்டத்துக்கு சென்றுவிட்டார்.
அங்கு ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களை குறைகளையும் கேட்டு வருகிறார். இதற்காக அரசு பஸ்சிலும் ஏறி இறங்கி குறிப்பிட்ட கிராமங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

இபி ஊழியர்கள்
இப்படித்தான் தோப்புத்துறை என்ற இடத்தில் இபி பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் மஞ்சள் கலர் ஹெல்மட், காக்கி யூனிமார்டுன் இருந்தார்கள். வெயிலில் நின்றுகொண்டும், கரண்ட் கம்பத்தின் அந்தரத்தில் தொங்கிக் கொண்டும் ஊழியர்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள்.

நம்மவர்
வேறு கிராமத்துக்கு பார்வையிட சென்று கொண்டிருந்த கமல், இவர்களை பார்த்ததும் வழியிலேயே நின்றுவிட்டார். பிறகு ஊழியர்களை நோக்கி சென்றார். நம்மளை நோக்கிதான் கமல் வருகிறார் என்று தெரிந்ததும் யாருக்கும் எதுவுமே ஒரு செகண்ட் புரியவில்லை.

கைகுலுக்கினார்
அவர்களிடம் சென்ற கமல், மின்ஊழியர்களை வெகுவாக பாராட்டினார். இவ்வளவு நாள் வெயில், மழை பாராமல் ராப்பகலாக வேலை செய்ததற்காக தனது நன்றியையும் தெரிவித்தார். பிறகு ஒவ்வொரு ஊழியரின் கையை பிடித்து குலுக்கி மனசார வாழ்த்து சொன்னார்.

திக்குமுக்காடி போயினர்
மண்டையை பிளக்கும் வெயிலில் வேலையில் மூழ்கி கிடந்த இபி ஊழியர்கள் கமலின் இப்படி ஒரு ஜில் பாராட்டினால் திக்குமுக்காடி போய்விட்டனர். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த கமல், தொடர்ந்து தனது ஆய்வு பணியினை நோக்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications