"அண்ணி".. இதென்ன லாட்ஜ்ஜா? வெளியே போடா.. அர்த்தராத்திரியில் கொந்தளித்த சரோஜா.. நாகையே நடுங்கிடுச்சு
நாகை: தனித்து வசித்து வந்த பாட்டியை யாரோ கொலை செய்துவிட்டார்கள்.. இதை கண்டுபிடிக்க போன நாகை போலீசுக்கு காத்திருந்தது அந்த அதிர்ச்சி.
நாகை கீரைக்கொல்லை தெருவில் வசித்து வருபவர் சரோஜா.. 67 வயதாகிறது.. இவரது கணவர் இறந்துவிட்டார்.. இவரது மூத்த மகன் கோவிந்தராஜ் சென்னையிலும், இன்னொரு மகன் புதுச்சேரியில் பிரபல பத்திரிகையிலும், பணியாற்றி வருகிறர்கள். இதனால், சரோஜா மட்டும் தனிமையில் வசித்து வருகிறார்.

மர்ம மரணம்: இந்நிலையில், சரோஜா மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார்.. இவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. இத்தனைக்கும் இவர் குடியிருக்கும் பகுதியில் நெரிசலான வீடுகள் உள்ளன.. சுற்றிலும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியில், எப்படி கொலை நடந்தது? என்பது புரியாத புதிராக இருந்தது. எனவே, புதுச்சேரியில் உள்ள சரோஜாவின் 2வது மகன், இது தொடர்பாக போலீசுக்கு போனார். தன்னுடைய அம்மாவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக நாகை நகர காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.. சரோஜா வீட்டுக்கு யார் யார் வந்து போனார்கள் என்று ஆராய்ந்தனர்.. அப்போது, ஒரு இளம் தம்பதி வந்துபோனதாக அங்குள்ளவர்கள் தகவல் சொன்னார்கள்..
யார் அந்த ஜோடி: பாட்டி அணிந்திருந்த நகையையும் காணவில்லை என்பதால், இந்த ஜோடிதான், பாட்டியை நகைக்காக கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர்.. இதையடுத்து தனிப்படை போலீஸார், அந்த ஜோடியை தீவிரமாக தேட ஆரம்பித்தது.
அப்போது வேளாங்கண்ணியில் பதுங்கி இருந்த, அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது.. இவர்கள் 2 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்..
அந்த இளைஞன் பெயர் காளிதாஸ்.. அவருடன் வந்த பெண்ணின் பெயர் வள்ளிமுத்து. சரோஜாவின் தூரத்து சொந்தக்காரராம் இந்த காளிதாஸ்.. தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை உதயடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்.. இதே கிராமத்தை சேர்ந்தவர்தான் வள்ளிமுத்து. அதாவது காளிதாஸுக்கு, வள்ளிமுத்து அண்ணி உறவுமுறையாகிறதாம். இவர்களிடையே தவறான உறவு முறை இருந்து வந்திருக்கிறது. 2 பேரும் ஜாலியாக இருக்க முடிவு செய்துள்ளார்கள்..
சரோஜா வீடு: இதனால் அந்த நேரத்தில், எங்கே போவதென்று தெரியாமல், தனிமையில் வசிக்கும் சரோஜா வீட்டுக்கு வள்ளிமுத்துவை அழைத்து வந்திருக்கிறார் காளிதாஸ்.. அதுவும் நள்ளிரவு நேரத்தில், அழைத்து வந்திருக்கிறார்.
அர்த்தராத்திரியில், அண்ணியுடன் காளிதாஸ் வந்திருப்பதை பார்த்ததும் சரோஜா கோபப்பட்டுள்ளார்.. பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை ஏற்காமல், சரோஜா காளிதாஸை கண்டித்திருக்கிறார்.. இதனால், சரோஜாவுடன் வாக்குவாதம் வந்துள்ளது.
ஒருகட்டத்தில் சரோஜா கூச்சலிட்டார்.. "இது ஒன்னும் லாட்ஜ் கிடையாது.. இங்கே ஜாலியா இருக்க கூடாது" என்று திட்டி உள்ளார்.
காளிதாஸ்: ஆத்திரம் இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், சரோஜாவின் முகத்தை தலையணையால் அமுக்கியிருக்கிறார்.. உடனே வள்ளிமுத்து, காளிதாஸுக்கு உதவுவதற்காக, சரோஜாவின் காலை கெட்டியாக பிடித்து கொண்டார்.. வள்ளிமுதது காலைபிடிக்க, காளிதாஸ் கழுத்தை நெரிக்க, சிறிது நேரத்திலேயே சரோஜா உயிர் பிரிந்தது.. பிறகு, திருட்டுக்காக நடந்த கொலை போல் இருக்க வேண்டும் என்பதற்காக, சரோஜா கழுத்தில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு கிளம்பி விட்டது அந்த ஜோடி.
இப்போது, காளிதாஸ், வள்ளிமுத்துவிடமிருந்து 1.6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயின், கம்மல், ஆகியவற்றை பறிமுதல் செய்தது நாகை தனிப்படை போலீஸ்.. கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கள்ள ஜோடி: முதலில், அண்ணியுடன் காளிதாஸ் வந்தபோது, சரோஜா எதுவுமே சொல்லவில்லையாம்.. வீட்டுக்கு வந்தவர்களை நல்ல முறையில் உபசரித்து சாப்பாடு தந்திருக்கிறார்.. அதற்கு பிறகு, தூங்க சென்றுள்ளனர்.. நள்ளிரவில்தான், அந்த ஜோடி, சரோஜாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. இப்போது, கள்ள ஜோடி 2 பேருமே, கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications