நாகப்பட்டினத்தில் அதென்ன குவியல் குவியலா? நாகூர் ஆண்டவர் தர்காவில்.. டக்னு நிறம் மாறிடுச்சு தண்ணீர்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நாகூர் தர்கா ஆண்டவர் குளத்தில் என்ன நடந்தது? என்று பக்தர்கள் அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள். இது தொடர்பான விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல மாதங்களாக காய்ந்திருந்த நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.

அதேசமயம், நீர்நிலைகளின் நிறமும் மாறி வருகிறது. அத்துடன் இங்குள்ள மீன்களும் திடீர் திடீரென இறந்து வருகின்றன.. சென்னை கொசஸ்தலை ஆற்றில் 4 நாட்களுக்கு முன்பு மீன்கள் கொத்து கொத்தாக இறந்துகிடந்தன. நேற்றைய தினம், கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையிலும் மீன்கள் இறந்து மிதந்தன.
அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கடந்த 15-ந் தேதி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சாலை கழிவுநீர் கலந்த நீரால் இந்த அணையில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தன... யாராலுமே அணைக்கு செல்ல முடியாத அளவிற்கு நாற்றம் வீசுகிறதாம்..
கோவை: ஆனால், இந்த மீன்கள் ஏன் இறந்தன என தெரியவில்லை. ஒருவேளை ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறந்திருக்கலாம். என்கிறார்கள்.. அல்லது நீர்நிலைகளில் மாசு கலந்த நீர் கலப்பதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.. ஆனால், திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கிறதாம்.. திருப்பூரை சுற்றிலும் நிறைய சாயப்பட்டறைகள் உள்ளதால், இதன் கழிவுகள் ஆற்றில் கலந்திருக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாகூர் ஆண்டவர்: இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு, இஸ்லாமியர்கள் தவிர, பிற மதத்தினரை சேர்ந்தவர்களும், ஏராளமானோர் வழிபட வருகை தருவது வழக்கமாகும்.. அப்படி தர்காவுக்கு வருபவர்கள், மொட்டையடித்து, தர்கா குளத்திலேயே குளித்து செல்வார்கள்.
இந்த தர்கா குளத்தில்தான், இன்று காலை மீன்கள் செத்து மிதந்திருக்கின்றன... இதனால், குளத்தின் நிறமே பச்சை கலருக்கு மாறிவிட்டதாக சொல்கிறார்கள்.. குளத்தில் எங்கு திரும்பினாலும், அதன் கரைகளில் கொத்து கொத்தாக மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. இதனால் தர்கா பகுதியையும் தாண்டி, 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசுகிறதாம்..

இறந்த மீன்கள்: இதையடுத்து, நாகூர் தர்கா நிர்வாகிகள் குளத்தில் உடனடியாக ஆய்வு நடத்த துவங்கியிருக்கிறார்கள்.. சிறிய ரக படகுகளில், 10 மீனவர்களை குளத்தில் இறக்கி, செத்த மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோடை வெயிலின் தாக்கத்தால் இநத மீன்கள் இறந்ததாக சொல்கிறார்கள்.. எனினும், குளம் தூய்மை செய்யப்பட்டு விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று தர்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர்: கழிவுநீர் ஆற்றில் கலப்பது, சாயப்பட்டறை நீர் குளத்தில் கலப்பது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கோடை வெயில் தாக்கம் போன்றவைகள்தான், மீன்கள் இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும், உண்மை காரணம் தெரியவில்லை. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், நீர்நிலைகளில் மீன்கள் இறந்துவருவது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications