மாதவிடாய் வலி சார்.. என்னால முடியாதுனு சொன்ன மாணவி.. நான் பார்த்துகிறேனு அழைத்த கல்லூரி ஆசிரியர்

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் மாதவிடாய் வலியில் இருக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அடுத்துள்ள புத்தூர் பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார்.

இந்த நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரிபவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்.

பாலியல் சில்மிஷம்

பாலியல் சில்மிஷம்

இவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நர்சிங் கல்லூரி

நர்சிங் கல்லூரி

இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதீஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஆசிரியர் சதீஷ், மாணவி ஒருவரை கண்டிப்பதற்கு தனது வீட்டிற்கு அழைப்பது, அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதுமான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவிடாய் வலி

மாதவிடாய் வலி

ஒருகட்டத்தில் தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்த பெண் சமாளிக்கவே அதையும் புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர் பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைக்கும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. நாகையில் பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி மாணவிக்கு அதே கல்லூரி ஆசிரியர் பாலியல் வன்புணர்வோடு செல்போனில் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

ஆசிரியர்

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன. வேலியே பயிரை மேய்வது போல் நம்பி அனுப்பும் ஆசிரியர்களே இது போல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுடன் பேசக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் ஒரு கல்லூரியில் ஒரு ஆசிரியரே அத்துமீறுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+