Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான்தாங்க மகேந்திர வர்மா.. கவிதா தெரியும்ல, அவர் புருஷன்! அரங்கேறிய பலே மோசடி.. தட்டி தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகையில் பல்வேறு இடங்களில் நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் இன்று கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது. இவரது பின்னணி தலை சுற்ற வைக்கிறது.

Recommended Video

    நான்தாங்க மகேந்திர வர்மா.. கவிதா தெரியும்ல, அவர் புருஷன்! அரங்கேறிய பலே மோசடி.. தட்டி தூக்கிய போலீஸ்

    நாகை புதிய கடற்கரைக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு கடந்த 24 ம் தேதி காரில் வந்த நபர் பொருட்கள் வாங்கினார்.

    உடனே கேசியர் வாங்கிய பொருட்களுக்கு பில்லை கொடுத்து பணம் கேட்டார். அதற்கு அந்த நபர் பணம் தராமல் சென்றார். கடை ஊழியர் பொருட்களுக்கான பணத்தை கேட்ட போது காரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

    நான்தான் மகேந்திர வர்மா

    நான்தான் மகேந்திர வர்மா

    கேசியர் விக்னேஷ்வரன் கார்டு இயந்திரத்துடன் காருக்கு அருகில் சென்றார். கார்டு இயந்திரத்தில் ஏடிஎம்., கார்டு மூலமாக பணம் செலுத்திய காருக்குள் இருந்த நபர் தன்னை மகேந்திர வர்மா என்றும், குஜராத்தில் டிஐஜியாக இருப்பதாக கூறினார். நாகை எஸ்பியை நான் கூப்பிட்டால் உடனே வருவார். அப்படி இருக்கும் என்னிடமே பணம் கேட்கிறாயா என மிரட்டினார்.
    இதில் சந்தேகமடைந்த விக்னேஷ்வரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர்.

    பழக்கடையையும் விட்டு வைக்கவில்லை

    பழக்கடையையும் விட்டு வைக்கவில்லை

    இந்நிலையில் கடந்த 28ம் தேதி வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகே பழக்கடை வைத்திருக்கும் ரவி என்பவரிடம் காரில் வந்த நபர் ஆயிரம் ரூபாய்க்கு பழங்கள் வாங்கி கொண்டு டிஐஜி என கூறி மிரட்டி சென்றார். இது குறித்து ரவி வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இந்த இரண்டு புகார்களை பெற்ற வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என உறுதி செய்து அவரை தேடி வந்தனர்.

    சிக்கிய வர்மா

    சிக்கிய வர்மா

    இந்நிலையில் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவர் நிற்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர்

    பெண் சப்-இன்ஸ்பெக்டர் டிரைவர்

    அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா ஜமீன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ் என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருப்போரூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கவிதாவிடம் ஓட்டுனராக பணிபுரிந்தது தெரியவந்தது. மேலும் கவிதா பணி உயர்வு பெற்று நாகையில் இன்ஸ்பெக்டராக வந்தவுடன் நாகை வந்த மகேஷ் தனது பெயரை மகேந்திர வர்மா என்று மாற்றி கொண்டு வடமாநிலத்தில் டிஐஜியாக வேலை பார்த்து வருவதாகவும், இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கவிதாவின் கணவர் என கூறி கொண்டு காரில் டிப்டாப் ஆக உடை அணிந்து கொண்டு நாகையில் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    விசாரணை தீவிரம்

    விசாரணை தீவிரம்

    மேலும் காவல்துறையில் உள்ள சிலரிடமும் பதவி உயர்வு வாங்கி தருவதாக கூறி ஏமாற்று வேலையில் மகேந்திரவர்மா ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திர வர்மா என்கிற மகேஷை கைது செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஆய்வாளர் கவிதாவிற்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் துறை ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+