இறால் மீனை பிடிக்க போன கனகவல்லி.. திடீர்னு அலறல்.. அப்படியே அடங்கிப்போன உசுரு.. நாகையே நடுங்கிடுச்சு
நாகப்பட்டினம்: மீன் கடித்து பெண் ஒருவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் நாகையில் இருந்து வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து கூடுதல் விவரங்களும் வெளிவந்து அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
நாகை மாவட்டம், பழங்காலமேட்டைச் சேர்ந்தவர் கனகவல்லி. இவர், கள்ளிவேடு அடைப்பாற்றில் இறால் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்.. அப்போது ஆற்றில் இருந்த மீன் ஒன்று, கனகவல்லியின் காலில் பலமாக கடித்ததாக தெரிகிறது. இதில் ரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது.

மீன் கடித்ததால், வலி பொறுக்க முடியாமல், கனகவல்லி கதறி அலறியிருக்கிறார்.. இதனால், அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்துள்ளனர். உடனடியாக கனகவல்லியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்குள் கனகவல்லி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்..
யார் இவர்: இது குறித்து தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கனகவல்லியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்..
இந்நிலையில், உயிரிழந்த பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி. என்பவரது மனைவிதான் இந்த கனகவல்லி.. 57 வயதாகிறதாம்.. இவர் அதே பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார்..
மீன்பிடி தொழில்: இவர்தான் மீன் பிடிக்கவும் அடப்பாற்றுக்கு போவாராம்.. அப்படித்தான் வழக்கமாக, மீன்பிடிக்க சென்றுள்ளார்.. இவருடன், அதே பகுதியை சேர்ந்த 5 பேரும் ஆற்றில் இறங்கி, இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்திருக்கிறார்கள்.. அப்போதுதான் எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த மீன் கடித்துள்ளது..
பெரிய திருக்கை: பெரிய திருக்கை மீன் தாக்கிவிட்டது என்கிறார்கள்.. இந்த திருக்கை மீனின் முட்கள், கனகவல்லி மீது குத்தியதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதாகவும், இதனால், சம்பவ இடத்திலேயே அவர் மயக்கம் அடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். உயிரிழந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்களாம்.
இந்த திருக்கை மீன் என்பது, நம்முடைய உடம்பையே திருக்கி கெட்ட கழிவுகளை வெளியேற்றிவிடுமாம். அதனால்தான் இதற்கு திருக்கை மீன் என்றே பெயர் வந்ததாக சொல்வார்கள்.
கூரான பற்கள்: இது ஒரு வித்தியாசமான மீன்.. உருவ அமைப்பே, மற்ற மீன்களிலிருந்து வேறு மாதிரியாக இருக்கும்.. தட்டையான உடலமைப்புடன் காணப்படும். இதன் மேல்புறத்திலேயே 2 கண்கள் இருக்கும்.. இதன் பற்கள் கூர்மையான ரம்பம்போல இருக்கும்.. வாலின் முன்பகுதியில் 2 கொடுக்குகள் இருக்கும்.. இந்த கொடுக்குகள்தான், திருக்கையின் ஆயுதம் ஆகும்.. இதை வைத்துதான் எதிரிகளை வேட்டையாடும்
திருக்கையின் வால், அதன் உடலைவிட நீளமாக இருக்கும்... அந்த வாலில், கூர்மையான நுண்ணிய முட்கள் ஏராளமாக இருக்கும். இந்த மீன், தன்னுடைய கண்களை மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும்..
பரிதாபம்: இந்த முட்களை நீக்கிவிட்டு, உணவுக்காக இந்த மீனை பயன்படுத்துவார்கள்.. ஆனால், இந்த முட்களிலிருந்துதான், நிறைய மருந்து பொருட்கள் எடுக்கப்படுகின்றன.. ரத்தம் உறைதலை தடுக்கவும், கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாகவும் இந்த திருக்கை மீன்கள் பயன்படுகின்றன. உயிர்களை காக்ககூடிய இந்த மீன்தான், ஒரு உயிரையும் இன்று பறித்து சென்றுள்ளது..!!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications