6 மணிக்கு மேலயா போன் பண்ற.. வங்கி மேனேஜரை அடித்து துவைத்த இளைஞர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை அருகே மாலை 6 மணிக்கு மேல் வங்கிக்கடன் தொடர்பாக பெண்ணுக்கு போன் செய்த வங்கி மேலாளரை வங்கிக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி அடித்துத் துவைத்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    6 மணிக்கு மேலயா போன் பண்ற.. வங்கி மேனேஜரை அடித்து துவைத்த இளைஞர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

    தமிழகத்தில் தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு மட்டுமல்லாது தனியார் வங்கிகள் மற்றும் சிறு வங்கிகள் மூலமாக கடன் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தவணையில் மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து தவணைத் தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளது.

    அவ்வாறு தவணைத் தொகையை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை எனில் வங்கி ஏஜென்டுகள் மற்றும் மேலாளர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதும் சில நேரங்களில் இது பிரச்சினையாகி விடுவதும் தொடர்ந்து வருகிறது.

    அத்துமீறும் ஏஜெண்டுகள்

    அத்துமீறும் ஏஜெண்டுகள்

    கடந்த வருடம் திண்டுக்கல் அருகே வங்கி தவணை தொகையை செலுத்த பெண்ணின் வீட்டுக்கு வந்த வசூல் ஏஜென்ட் அவரது வீட்டுக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டு பணம் கொடுத்தால் தான் செல்வேன் என கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் வங்கி ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட பெண் விவசாயி ஒருவரை வங்கிக்கடன் செலுத்தவில்லை எனக் கூறி மாரியாதை குறைவாக பேசினால் சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாகை அருகே இதற்கு அப்படியே நேர்மாறாக வங்கி மேலாளரை வங்கிக்கு உள்ளேயே இளைஞர் ஒருவர் புகுந்து தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மகளின் சுயஉதவி குழு கடன்

    மகளின் சுயஉதவி குழு கடன்

    நாகை மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலவேணி. இவர் தனது பகுதியில் உள்ள பெண்கள் சிலருடன் சேர்ந்து மகளிர் சுய உதவி குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார் பின்னர் மகளிர் சுய உதவி குழு கடன் பெறுவதற்காக கொளப்பாடு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மனு செய்துள்ளார். இதையடுத்து கடன் வழங்குவது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் மேலாளர் பிருத்விராஜ் கமலவேணியை தொடர்பு கொண்டுள்ளார்.

    மேலாளருடன் வாக்குவாதம்

    மேலாளருடன் வாக்குவாதம்

    கமலவேணிக்கு பதில் தொலைபேசியை எடுத்து அவரது மகன் கோபிஆனந்த், வங்கி மேலாளர் பிரித்திவிராஜிடம் வங்கி மேலாளர் என்றால் வங்கி வேலை நேரத்தில் பேச வேண்டியதுதானே மாலை 6 மணிக்கு மேல் எனது தாய்க்கு ஏன் போன் செய்கிறாய் என கேட்டுள்ளார். கடன் கேட்டது நீங்கள் தானே நான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என பிரித்திவிராஜ் கூறியதால் கோபம் அடைந்த கோபிஆனந்த் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து போனிலேயே இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி சரமாரியாக திட்டி கொண்டதாக கூறப்படுகிறது.

    வங்கிக்குள் புகுந்து தாக்குதல்

    வங்கிக்குள் புகுந்து தாக்குதல்

    இந்நிலையில் வங்கி மேலாளரின் பேச்சால் ஆத்திரமடைந்த கோபி ஆனந்த் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த மேலாளர் பிரித்திவிராஜ் இடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் . அப்போது ஏற்பட்ட தகராறு மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கோபிராஜ் பிருத்விராஜை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் பிரித்திவிராஜ் புகார் கொடுத்துள்ள நிலையில் கோபினத் உடல்நிலை சரியில்லை என திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+