மதம் மாறி திருமணம்.. நைஸாக பேசி வேளாங்கண்ணிக்கு வந்து சரமாரியாக வெட்டிய பெண் வீட்டார்! பயங்கரம்!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த மணமகன் குடும்பத்தினரை சரமாரியாக வெட்டிவிட்டு, புதுமணப்பெண்ணை கடத்திச் சென்ற பெண் வீட்டார் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மணமகன் மற்றும் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியில் வசித்து வருபவர்கள் டேனியல் - கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 22 வயதில் ராகுல் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், ராகுல் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கடும் எதிர்ப்பையும் மீறியும் ராகுலும், கீர்த்தனாவும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தங்களது திருமணத்தை பற்றி பேசியுள்ளனர். அப்போது மீண்டும் கீர்த்தனாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, கீர்த்தனாவை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் ராகுல். தனது பெற்றோரிடம் பேசி, குடும்பத்தினர் ஆதரவுடன் வேளாங்கண்ணிக்கு வந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று மதம் மாறி, நாகை வேளாங்கண்ணியில் ராகுல் - கீர்த்தனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்த தகவலை அறிந்த இளம்பெண் கீர்த்தனாவின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராகுல் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் நைசாக பேசி அவர்கள் இருக்கும் விவரத்தை கேட்டுள்ளனர். இவர்களும் தங்கியிருக்கும் முகவரியை தந்துள்ளனர்.
பின்னர், பெங்களூரில் வசிக்கும் கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு கார்களில் விரைந்து வந்துள்ளனர். ராகுல் மற்றும் கீர்த்தனா தங்கியிருந்த விடுதியில் உள்ளே நுழைந்து ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி, இளம்பெண் கீர்த்தனாவை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது தடுக்க முயன்ற போது ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து வந்த வேளாங்கண்ணி போலீசார், வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிப் பின்தொடர்ந்தனர்.
சேஸ் செய்து, கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு பகுதியில் வெங்கோராவ் (30) மற்றும் ராம்நாத் ராவ் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். மணப்பெண்ணுடன் தப்பி சென்ற அவரது குடும்பத்தினரை போலீசார் தேடினர்.
பெங்களுர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications